புதுமையான ஸ்டைலில் கேரட் முட்டையை சேர்த்து பொறியல் செஞ்சுப் பாருங்க.!
Carrot Egg Poriyal recipe In Tamil
தேவையான பொருட்கள் :
கேரட் - 250 கிராம்
முட்டை - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடான உடன் எடுத்து வைத்த கடுகு, கருவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
கேரட்டை நன்றாக கழுவியப்பின் பூ போல துருவி வாணலியில் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக விட்டு நன்கு கேரட் வெந்த நிலையில் இரண்டு முட்டைகளை உடைத்து அதில் ஊற்றி நன்கு கிளறிவிட்டு முட்டையும் வெந்தவுடன் இறக்கவும்.
இது புது சுவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொறியலாகும்.
English Summary
Carrot Egg Poriyal recipe In Tamil