சம்மரில் இந்த கலர் ட்ரெஸ் போட்டா செத்துடுவீங்க பாஸ்.! உஷார்.! - Seithipunal
Seithipunal


ஆடை என்பது நம் அழகு உடலை மறைப்பது மற்றும் நம் உடலை தூசி மற்றும் அழுக்கு போன்றவற்றிலிருந்து பாதுகாப்புகிறது என்பதையும் தாண்டி நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கோடை வெயில் காலங்களில் சரியான ஆடையை தேர்ந்தெடுத்து அணிவது அவசியம். அதற்கு எந்த மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும் என்று பார்ப்போம்.

கோடை காலங்களில் ஆண் பெண் இருபாலரும் கருப்பு நிற மற்றும் பளிர்நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். இவற்றிற்கு வெப்பத்தை உட்கிரகித்து கொள்ளும் தன்மை அதிகம். இதன் காரணமாக நமது உடலின் வெப்ப நிலை அதிகரிக்கும் இதன் மூலம் பல்வேறு நோய்கள் நமக்கு ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது. இதனைத் தவிர்த்துக்கொள்ள வெண்ணிற ஆடைகள் மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிவது சிறந்தது.

கோடை காலத்தில் பெண்கள் பருத்தியினால் ஆன ஆடைகளை அணிவது மிகச் சிறந்ததாகும். பருத்தி நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதோடு கோடை காலங்களில் ஏற்படும்  சங்கடங்களிலிருந்தும் உடலை பாதுகாக்கிறது. பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் கோடை காலத்தில் இதமான உணர்வை பெறலாம்.

கோடை காலத்தில் சிந்தடிக் மற்றும் பாலிஸ்டர் போன்ற ஆடைகளை அணிவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இவற்றின் காரணமாக நமது வியர்வை உடலிலிருந்து வெளியேறாமல் உடலிலேயே தங்கி தோல் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்‌. இவற்றை தவிர்ப்பதற்காக காட்டன் ஆடைகளை அணிவது சிறந்ததாகும். இவற்றால் தோல் அரிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

உடலை ஒட்டி இருக்கும் ஜீன்ஸ் லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு இறுக்கமாக இருக்கும் எல்லா ஆடைகளையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. உடலுக்கு இதமான லூஸ் ஃபிட் காட்டன் உடைகளை அணிவதே சிறந்ததாகும்.

கோடை காலத்திற்கு காதி மற்றும் கைத்தறி உடைகள் சிறந்தவையாகும். இவை உடலுக்கு இதமாக இருப்பதோடு அரிப்பு போன்ற தொந்தரவுகள் இல்லாமல்  நம் உடலை பாதுகாக்கும். எனவே கோடைகாலத்தில் காதி மற்றும் காட்டு ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவது சிறந்ததாக இருக்கிறது‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clothes to choose and wear in summer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->