இட்லி தோசைக்கு கொஞ்சம் வித்தியாசமா, ஆரோக்கியமான பீர்க்கங்காய் சட்னி ரெஸிபி இதோ.! - Seithipunal
Seithipunal


இன்று நாம் பீர்க்கங்காய் சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  விரும்பி சாப்பிடும் வகையில் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள் 
பீர்க்கங்காய்  - 250  கிராம் 
உளுந்தம் பருப்பு  - 2  டேபிள்ஸ்பூன் 
எண்ணெய்       - 2   டேபிள் ஸ்பூன்  
கறிவேப்பிலை   -  சிறிதளவு 
பெருங்காயம்     -  சிறிய துண்டு 
வர மிளகாய்        -  4 
புளி                         -  சிறிய துண்டு 
பூண்டு                   - 6 பல்
சின்ன வெங்காயம்  - 15
தேங்காய் துருவல்    -  சிறிதளவு 
உப்பு                                -  சுவைக்கு ஏற்ப 
தக்காளி                 - 1
கொத்தமல்லி      -  சிறிதளவு

செய்முறை :

முதலில் பீர்க்கங்காயை எடுத்து அதன் தோலை நீக்கி நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து  அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி  எண்ணெய் நன்றாக சூடானதும் உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும்.

உளுத்தம் பருப்பு நன்றாக பொரிந்து வந்ததும்  பெருங்காயக் கட்டி சேர்த்து நன்றாக வறுக்கவும். இதனுடன்  கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இவற்றுடன் நான்கு வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இவை நன்றாக வதங்கியதும் அதனுடன் புளி சேர்த்து கூடவே பூண்டு பல் சின்ன வெங்காயம்  இவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். சின்ன வெங்காயம் அதிகமாக சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

சின்ன வெங்காயம் நிறம் மாறும் வரை பொறுத்திருந்து அதன் பிறகு தக்காளி சேர்த்து  இதனை நன்றாக வதக்கி தக்காளி நன்றாக மென்மையானதும் நாம் நறுக்கி வைத்திருந்த பீர்க்கங்காய் சேர்த்து  அவற்றை நன்றாக வதக்கி அதனுடன் தேங்காய் துருவல் மற்றும்  தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக வேக விட வேண்டும்.

இது நன்றாக வெந்து வந்ததும் அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வேக விட்டுப் பின்னர் அதனை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.

இதனை தாளித்து சாப்பிட விரும்புபவர்கள்  இரண்டு வரமிளகாய் மற்றும் கருவேப்பிலையை  எண்ணெயில் போட்டு தாளித்து அரைத்து வைத்த பீர்க்கங்காய் சட்னியுடன் கலந்து சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delicious and different ridge guard chutney receipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->