சப்பாத்தியும், சாதமும் ஒன்றாக சாப்பிடும் நபரா நீங்கள்..? அப்போ 'இது' உங்களுக்குத் தான்..! - Seithipunal
Seithipunal



நம் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக உணவு இருக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவுகள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது இந்தியாவில் தனி இடத்தைப் பிடித்துள்ள இரண்டு உணவுகள் என்றால் அவை சப்பாத்தியும், அரிசி சாதமும் தான். இந்த இரண்டு உணவிலும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. 

அந்த வகையில் சிலருக்கு சப்பாத்தியும், சிலருக்கு சாதமும் பிடிக்கும் என்றாலும் சிலரோ இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதும் உண்டு. ஆனால் சப்பாத்தியும், சாதமும் ஒன்றாக சாப்பிட்டால் அவை உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 


இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்று இங்கு பார்ப்போம். சாதம், சப்பாத்தி இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் 'டைப் 2 ' நீரிழிவு நோய்க்கான அபாயம் அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் இவரை இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது. 

மேலும் இவற்றால் உடலில்கிளைசெமிக் குறியீடு அதிகரிக்கும். இதன் காரணமாக செரிமானப் பிரச்சினை ஏற்படும். மேலும் இதனால் உடல் வீக்கம் மற்றும் கொழுப்பு அதிகரிக்கும். இந்த இரண்டு உணவிலும் கார்போஹைட்ரேட் இருப்பதால் இவை வயிற்றில் அமிலம், வாயு போன்ற பிரச்சினைகளோடு மலச்சிக்கலையும் ஏற்படுத்தும். 

எனவே சாதம், சப்பாத்தி இரண்டையும் ஒன்றாக சாப்பிடாமல், குறைந்தது 2 மணி நேர இடைவெளியில் சாப்பிடலாம். மேலும் இதனால் இந்த இரண்டு தானியங்களில் இருக்கும் முழு சத்தும்  உங்கள் உடலுக்கு கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do You Eat Chapati and Rice Together Read This Its For You


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->