ஞாபக மறதி அதிகமா இருக்கா? அப்போ இதை டிரை செய்து பாருங்க!  - Seithipunal
Seithipunal


ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது..முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் இந்த பிரச்சனையால ரொம்பவே கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க..ஞாபக மறதியில் இருந்து விடுபட சில எளிய வழிகளை நான் உங்களுக்கு சொல்லறேன்.

தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் ரொம்பவே தொடர்பு உண்டுங்க! அதுனால தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்து வருவது மனநலத்துக்கு மட்டுமல்ல ஞாபக மறதி பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவும் உதவும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிக்க செய்யலாம். பொதுவாக எந்த வேலை செய்வதாக இருந்தாலும் வலது கையைத்தான் அதிகமாக பயன்படுத்துவோம்.

அதற்கு மாற்றாக இடது கையை உபயோகிக்கலாம். அதன் மூலம் மூளையின் செயல்திறன் மேம்படும். ஞாபக மறதியின் வீரியம் குறையும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதும் மூளை சிறப்பாக செயல்பட உதவும். அதனால் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் பயிற்சிகளை செய்து வரலாம். யோகாசனங்களும் பலன் கொடுக்கும்.

அவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும் உதவிடும். உணவுக்கட்டுப்பாடும் அவசியமானது. சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க உதவும் புரோக்கோலி, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், மீன் போன்றவற்றை உணவுகளை சாப்பிட்டுவருவதன் மூலம் ஞாபக மறதி பிரச்சனையில் இருந்து எளிதில் வெளியேறலாம்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you have more memory loss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->