தினமும் காபி குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?...எச்சரிக்கும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்! - Seithipunal
Seithipunal


தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்க செல்வதற்குள் நான் ஐந்தாறு காபி குடித்து விடுவேன் என்று சொல்லும் பலரை தினமும் பார்த்து இருப்போம். ஆனால் அந்த காபிக்குள் உற்சாகம் மட்டுமல்ல. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விவகாரமும் ஒளிந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

தலைநகர் டெல்லியில் அமெரிக்கன் கல்லூரியின் இதயவியல் துறையில் நடந்த கருத்தரங்கில்,தினமும் 4 காபி குடிப்பதே இதயக்கோளாறுக்கு வழிவகுக்கலாம் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

எவ்வளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும் ஒரு நாள் ஒன்றுக்கு 400 மில்லி காபியின் நுகர்வு இதயக் கோளாறுக்கு வழிவகுக்கும் என்றும், இது உடலின் 'பாராசிம்பேடிக்' அமைப்பை தொந்தரவு செய்வதோடு, உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளனர்.  

மேலும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களிடம்  ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்வில், காபி, டீ மற்றும் பெப்சி, ரெட் புல் ஆகியவற்றை குடிப்பவர்களில், பலருக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு பிரச்சனை இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வின் போது பெண்களிடமும் அதிக அளவு காபி அல்லது குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் இருப்பது தெரிய வந்ததுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you know what happens if you drink coffee every day Medical researchers warn


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->