நமது உடல் ஆரோக்கியமாக இருக்க காலையில் எழுந்ததும் இதையெல்லாம் செய்யவே கூடாது.? - Seithipunal
Seithipunal


நமது உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க காலையில் எழுந்ததும் தவிர்க்க வேண்டிய சில பழக்க வழக்கங்கள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். காலையில் எழுந்தவுடன் சோம்பேறித்தனமாக இருப்பது அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான். 

அந்த வகையில் எல்லோராலும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. இதில் காலையில் நாம் எழுந்திருக்கும் மனநிலை பொறுத்து தான் அன்று முழுவதும் நமக்கு எப்படிப்பட்ட நாள் என்பது அமைகிறது. அதனால் நாம் காலையில் எழுந்ததும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து என்னென்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தாலும் மீண்டும் மீண்டும் தூங்க வேண்டும் என்று சிலருக்கு தோன்றும் இவ்வாறு இருப்பது உங்களது மனநிலையை சீர்குலைத்து உங்களுக்கு மந்தமான உணர்வை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக சீரான விழிப்பு நேரத்தை அமைத்து அலாரம் அடித்தவுடன் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்யலாம்.

அதே போல் காலை உணவு எளிதான உணவாக இருக்க வேண்டும். ஏனென்றால் காலையில் சாப்பிடும் உணவு அன்றைய நாளை தீர்மானிக்கிறது. விரைவில் செரிமானம் ஆகும் உணவு எடுத்துக் கொண்டால் நமது உடலையும், மனதையும் எளிதாக வைத்துக் கொள்ள உதவும்.

குறிப்பாக காலையில் எழுந்தவுடன் செல்ஃபோன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் அவ்வாறு பார்ப்பதால் தேவையற்ற அதிர்ச்சி மற்றும் மன குழப்பங்கள் ஏற்படும். எனவே காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக எந்த ஒரு வேலையையும் தொடங்கக்கூடாது. இது மன அழுத்தம் மற்றும் குழப்பமான உணர்வுக்கு வழிவகுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't do it some activities in morning wake up


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->