மன அழுத்தமா.? கவலை வேண்டாம்.! மன ஆரோக்கியம் மேம்பட இதோ சில டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


மன அழுத்தம் என்பது இயந்திர வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது. தீவிரமான மன அழுத்தத்தில் இருக்கும்போது அது நமது மனதை பாதிப்பதோடு உடல் நலனையும் சேர்த்து பாதிக்கிறது. இவற்றிலிருந்து வெளி வருவதற்கு ஆரோக்கியமான உணவு   முறையான தூக்கம், தியான பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகள் மருத்துவரின் ஆலோசனை ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.

மன அழுத்தத்தில் இருக்கும் போது நம் உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு எந்த வேலையும் செய்யத் தோன்றாது. ஆனால் நாம் ஏதேனும் ஒரு வேலையை எடுத்து செய்யும் போது நம்மை பாதித்த அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளி வருவதற்கு அது ஒரு சிறந்த செயலாக அமையும்.

ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள் மன அழுத்தத்திலிருந்து வெளிப்பட சிறந்த மருந்தாகும். இந்த உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோர் அதிக அளவில் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டதாக தெரிவித்திருக்கின்றனர். எப்போதாவது மன அழுத்தத்தை உணரும்போது ஏரோபிக்ஸ் பயிற்சிகளை கடைப்பிடிக்கலாம். அல்லது வீட்டிற்குள்ளேயே நடைபயிற்சி செய்தல், மாடிப்படி ஏறி இறங்குதல் போன்ற செயல்களிலும் ஈடுபடலாம்.

உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் எப்போதுமே தொடர்பு இருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் மணமும் ஆரோக்கியமாக இருக்கும். மன அழுத்தத்தில் இருக்கும் போது ஒன்று அதிகம் சாப்பிடுவது போல் தோன்றும் இல்லை என்றால் சாப்பிடாமல் இருக்க தோன்றும். இதனைத் தவிர்த்து முறையான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க பழகுங்கள். இதனால் உடல் ஆரோக்கியமாகும். உடல் ஆரோக்கியம் மன அமைதியை மீட்டு தரும்.

மன அழுத்தத்திலிருக்கும் போது சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை பெரும்பாலும் தவிர்த்து வாருங்கள். நீங்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக பல்வேறு செய்திகளை பார்க்கும்போது உங்கள் மனதை காயப்படுத்திய ஒரு விஷயம் அல்லது நிகழ்வோ வேறு ஒரு செய்தியின் மூலமாக மீண்டும் உங்களுக்கு அந்த நினைவை ஏற்படுத்தலாம். இதனால்  கூடுமானவரை சமூக வலைதளங்களிலிருந்து வெளியே இருந்து ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வாருங்கள்.

 இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது  ஒரு சிறந்த மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது ஆகும் . மீள முடியாத மன அழுத்தத்தில் இருந்தால்  நல்ல மனநல மருத்துவரை சந்தித்து  அவரிடம் ஆலோசனைப் பெறுங்கள்  ஒரு கொடுக்கும் சிகிச்சை முறைகளை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள் . உங்கள் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவதோடு உங்களது மன அழுத்தமும் குறையும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dont worry about stress just follow these methods


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->