மன பதற்றத்தில் இருக்கிறீர்களா.? கவலை வேண்டாம்... இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


பதற்றம் என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான் என்றாலும் சிலருக்கு அது  அதிகமாக ஏற்பட்டு முக்கியமான நேரங்களில் அவர்களை மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாக்கும். இந்தப் பதற்றத்தை கட்டுப்படுத்த மனப்பயிற்சிகள் மூச்சுப் பயிற்சிகள் என்று இருந்தாலும் நமது உணவு முறைகளில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் பதற்றத்தில் இருந்து விடுபடலாம். அதற்கான உணவு முறைகளை பற்றி பார்ப்போம்:

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்  அதிகமான சர்க்கரை உணவுகள்  தேநீர் மற்றும் காபி போன்றவற்றில்  கார்டிசோல் உற்பத்தி அதிகமாக இருப்பதாலும்  இவை என் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதாலும்  பதற்றம் மேலும் அதிகரிக்கும் . எனவே அதிகமாக பதற்றத்தை உணர்பவர்கள்  இது போன்ற உணவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது .

முந்திரி பதற்றமாக உணருபவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு உணவுப் பொருளாகும். இதிலிருக்கும் அதிகப்படியான மக்னீசியத்தின் காரணமாக நம் நரம்புகளை தளருடைய செய்து ரத்த ஓட்டத்தினை சீராக்கி உடலுக்கும் மனதிற்கும் அமைதியை கொடுக்கிறது.

அனைத்து வகையான பெர்ரி பழங்களும் பதற்றத்தை போக்குவதற்குரிய சிறந்த உணவுப் பொருட்களாகும். இவற்றில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்ற மூலப் பொருட்கள் உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடலையும் மூளையும் அமைதி கொள்ளச் செய்கிறது.

மனப்பதற்றத்தை குறைப்பதற்கு மிகச்சிறந்த ஒரு உணவு சால்மன் மீன்களாகும். இந்த மீன்கள் புரதம் மற்றும் ஒமேகா-3 கொடுப்பா அமிலங்களின்  முக்கியமான  உணவாகும். இவற்றில் இருக்கக்கூடிய ஓமேகா 3 அழற்சி பண்புகளை கொண்டிருக்கிறது. இவை மனக்கவலை மற்றும் பதற்றத்தின் அறிகுறிகளை குறைக்க கூடியவை.

மனப்பதற்றம் மற்றும் கவலைகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த உணவு. இதிலிருக்கக்கூடிய குர்குமின் மணப்பதற்றத்தை உருவாக்கும் காரணிகளுக்கு எதிராக  செயல்பட்டு உடலையும் மனதையும் அமைதி படுத்த உதவுகிறது.

டார்க் சாக்லேட்டில் இருக்கும் பிளேவனாய்டுகள் மனக்கவலையை போக்கும் சக்தியை கொண்டவை. இவற்றை அடிக்கடி எடுத்து வரும்போது மனக்கவலை மற்றும் மனப்பதற்றும் ஆகிய வீட்டிற்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dont worry if you are stressed take these foods


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->