கோடை காலத்தில் அணியவேக் கூடாத உடைகள்! அணிய வேண்டிய உடைகள்! - Seithipunal
Seithipunal


சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள உணவு மற்றும்  நாம் குடிக்கும் பானங்களில் மாற்றங்களை செய்வதை போல நம் ஆடைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் அணிவதற்கு உகந்த ஆடைகள் எவை  மற்றும் நம் கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய ஆடைகள் எவை என பார்க்கலாம்.

கோடை காலத்தில் அணிவதற்கு மிகச்சிறந்த ஆடை பருத்தியினால் தயாரிக்கப்பட்ட ஆடைகளாகும். இவை உடலுக்கு மென்மையாக இருப்பதோடு  கோடை வெயிலில் தாக்கத்திற்கு  இதமாகவும் இருக்கும். அதனால் கோடை காலத்தின் போது அதிக அளவில் பருத்தியினாலான ஆடைகளை அணிவது நல்லது.

லினன் ஆடைகள் மற்றும் மென்மையான ஆடைகளும் கோடை காலத்தில் அணிவதற்கு உகந்த ஆடைகளாகும். மேலும் மென்மையான வண்ணங்களை கொண்ட ஆடைகளை அணிவதால்  சூரிய வெப்பத்தை நம் உடல் உள்வாங்காமல் தடுக்கும்.

காதி ஆடைகளும் கோடைகாலத்தில்  அணிவதற்கு சிறந்த ஆடைகளாக வழங்குகின்றன. இவையும் பருத்திகளைப் போலவே  உடலுக்கு மென்மையை கொடுக்கும். பெரும்பாலும் கோடை காலத்தில் உச்சி வெயில் வரும் நேரங்களான 12 மணியிலிருந்து 3 மணி வரை  வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

கோடை காலம் தொடங்கியவுடன் நம் ஆடை அணிவதில் பல மாற்றங்களை செய்ய வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணியாமல் தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். குறிப்பாக பாலிஸ்டர் மற்றும் நைலான் ஆடைகளை தவிர்ப்பது நலம்.

அதைப்போல ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை தவிர்ப்பதும் நல்லது. பெண்கள் கருப்பு மற்றும் அதிக கான்ட்ராஸ்ட்   வண்ணங்களை உடைய ஆடைகளை  தவிர்க்க வேண்டும். இவை சூரிய ஒளியை உக்கிரகித்து வைத்துக் கொள்ளக் கூடியவை.

இறுக்கமான ஆடைகளை அணிவதால்   கோடை நேரத்தில் வியர்வை நம் உடலில்  கொப்புளங்கள் மற்றும் அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். இதன் காரணமாக இறுக்கமான ஆடைகளை தவிர்த்துக் கொள்வது  நலம் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dresses to wear and dresses to avoid in summer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->