பால் குடிக்கும் குழந்தைக்கு திட உணவாக முட்டை கொடுக்கலாமா.?!
Egg For Baby
பால் மட்டுமே குடித்து வந்த குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்கும் போது அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முட்டை வீதம் கொடுக்கலாம்.
முட்டையை நன்றாக வேக வைத்து அதை மசித்து கொடுக்க வேண்டும். மசிக்காமல் அப்படியே கொடுக்கக் கூடாது. ஏனெனில், முட்டை செரிமானம் ஆகுவதற்கு நிறைய நேரம் தேவைப்படும்.
அத்துடன் ஏதாவது புதிய உணவுகளை குழந்தைக்கு நாம் அறிமுகப்படுத்தினால் ஒரு உணவை குழந்தைக்கு கொடுத்த பின் இரண்டாவது உணவை மீண்டும் அறிமுகப்படுத்த இரண்டு முதல் மூன்று நாட்கள் நிச்சயம் இடைவெளி விட வேண்டும்.
அப்படி இல்லாமல் ஆரம்பத்திலேயே அடிக்கடி உணவுகளை மாற்றி மாற்றி கொடுத்தால் குழந்தைக்கு எந்த உணவு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிய முடியாது.
எனவே ஒரு உணவை கொடுத்துவிட்டு இரண்டு மூன்று நாட்கள் இடைவெளி விட்டு அது குழந்தைக்கு ஒத்து வருகிறதா என்று கவனித்துக் கொள்ள வேண்டும். அப்படி பிரச்சினை எதுவும் இல்லை என்றால் அந்த உணவுகளை தொடர்ந்து கொடுக்கலாம்.