அகோரப் பசியிலும் தவிர்க்க வேண்டிய சில மதிய உணவுகள்..!!
Foods to Avoid At Lunch
நாம் அனைவரும் ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவு உண்கிறோம். ஆனால் அவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியமானது. இந்தப் பதிவில் மதிய உணவின் போது தவிர்க்க வேண்டிய சில உணவுகளைப் பற்றி பார்ப்போம்.
1. வறுத்த உணவுகள் : வெளியில் சுற்றும் வேலையில் இருக்கும் பெரும்பாலானோர் செய்யும் தவறு கடையில் கிடைக்கும் வறுத்த உணவுகளை சாப்பிடுவது. இவை செரிமானத்தை கடுமையாக பாதிக்கும்.
2. மிஞ்சிய உணவு : முதல் நாள் செய்ததில் மீதமாகிப் போன உணவுகளை அடுத்த நாள் மதியம் வரை வைத்து சாப்பிடுவது வயிற்றில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும். புதிதாக சமைத்த உணவுகளை மட்டுமே மதியம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
3. சூப் மற்றும் சாலட் : மதிய உணவில் சூப் மற்றும் சாலட் இவற்றை மட்டுமே சிலர் உண்பார்கள். மதியம் இவற்றை மட்டும் சாப்பிட்டு விட்டு, மாலையில் வேறு ஏதேனும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டால், மோசமான பின் விளைவுகள் ஏற்படும்.
4. சாண்ட்விச் அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகள் : இவற்றையும் மதிய உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் .
5. பீட்சா மற்றும் பாஸ்தா : மதியத்திற்கு ஒருபோதும் பீட்சா மற்றும் பாஸ்தா வகை உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை செரிமான அமைப்புகளை பாதிப்பதோடு, உடல் எடையையும் வேகமாக அதிகரிக்கச் செய்கிறது.
எனவே இதுபோலான உணவுகளை மதிய உணவின் போது தவிர்த்து விட்டு, சரிவிகித உணவுகளை மட்டுமே எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.