Freedom Fighters : தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கியவர்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


ரா.கிருஷ்ணசாமி:

இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

பிறப்பு :

கிருஷ்ணசாமி 1902ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் ராமசந்திரபுரம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

கல்வி :

கிருஷ்ணசாமி நான்காம் வகுப்பு வரையில் பள்ளியில் கல்வி பயின்றார். பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர்.

விடுதலை போராட்டத்தில் கிருஷ்ணசாமியின் பங்கு :

1922ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1930ஆம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கம், 1940ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகம், 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் இயக்கம் ஆகியவற்றின் போது சிறை சென்றார்.

இவர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் மூன்று முறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 

கிருஷ்ணசாமி 1952ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்தபோது, ரா.கிருஷ்ணசாமி செயலாளராக பல ஆண்டு பணிபுரிந்தார். 

கிருஷ்ணசாமி 1959ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். 

கிருஷ்ணசாமியின் மறைவு : 

'வினோபா பாவே" பூமிதானக் கொள்கைக்காக ஏழை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தானமாக வழங்கிய கிருஷ்ணசாமி 1973ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Freedom Fighter History of ra kirushnamoorthy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->