2023 புத்தாண்டை இப்படி கொண்டாடி பாருங்கள்.. எப்போதும் தித்திக்கும்.!  - Seithipunal
Seithipunal


ஆங்கில புத்தாண்டு என்றாலே இப்போதெல்லாம் பெரு வாரியான மக்கள், முதல் நாள் இரவு முதல் விடிய விடிய  பார்ட்டிகளில் குடித்துவிட்டு, ஆட்டம் பாட்டங்களில் நேரத்தை செலவிட்டு புத்தாண்டு தினமான மறுநாள் விடிந்த பின்பும் நீண்ட நேரம் உறங்கி மதிய வேலையில் எழுவது தான் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது .

இதனை கொஞ்சம் மாற்றி புத்தாண்டு கொண்டாட்டங்களை நாமும் நமது குடும்பத்தினரும் இணைந்து எவ்வாறு மகிழ்ச்சியானதாக மாற்றலாம் என்று பார்ப்போமா?

புத்தாண்டு அன்று ஒரு இனிய தொடக்கமாக, எப்போதும் வீட்டு வேலை செய்துக் கொண்டிருக்கும் நம் மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அந்த ஒரு நாள் அவர்களுக்கு பிடித்தமான உணவை நாம் சமைத்துக் கொடுத்தோ, அல்லது அவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டோ வேலையைச் செய்து அவர்களை அசத்தலாம் .

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என்ற பாகுபாடில்லாமல் புத்தாண்டு அனைவரும் இணைந்து ஏதேனும் ஒரு விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
எடுத்துகாட்டாக பழங்கால விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி, பாட்டுக்கு பாட்டு, அல்லது ஹவுஸீ ஹவுஸீ, போர்ட் கேம்ஸ் போன்றவை.

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் புத்தாண்டு தினத்தன்று சர்ப்ரைஸாக ஏதேனும் ஒரு பரிசு பொருளை கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காடச் செய்யலாம்.

புத்தாண்டு தினத்தன்று வீட்டில்‌ இருப்பவர்களை அழைத்துக்கொண்டு எங்கேயும்  ஒரு சுற்றுலாத் தளத்திற்கு சென்று வரலாம். அது ஒரு புத்துணர்ச்சியான உணர்வை கொடுக்கும்.

இந்த புத்தாண்டானது இனிமையாக அமைய  வீட்டில் இருப்பவர்களோடு வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவது  நல்ல ஒரு மனநிலையையும் மன அமைதியையும் கொடுக்கும்.

புத்தாண்டு தினத்தன்று நம்பிக்கையை விதைக்கும் விதமாக, நாமும் நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளும் சேர்ந்து ஒரு சிறு செடி, அல்லது ஒரு மரக்கன்றை நட்டு வைக்கலாம். அது புத்தாண்டுக்கு ஒரு இனிய தொடக்கமாக அமையும், மேலும் குழந்தைகளிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பிடித்த இடமாக எப்போதும் இருப்பது மனைவியின் தாய் வீடு தான். எனவே தாய் வீட்டிற்கு உங்கள் குடும்பத்துடன் விசிட் அடித்து, உங்கள் மாமனார் மாமியாரையும் குஷிப்படுத்தி உங்கள் வீட்டு குட்டீஸ் மற்றும் மனைவியையும் சந்தோஷப்படுத்தினால் அந்த நாள் மறக்க முடியாத நாளாக மாறிவிடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Happy new year 2023 Celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->