நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும் 5 உணவுப் பொருட்கள்.! - Seithipunal
Seithipunal


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப அனைத்து மக்களுமே நோயின்றி வாழ்வதை தான் விரும்புவார்கள். நம் உடலை நோய் தொற்றிலிருந்து காக்க உதவுவது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையிலேயே பெறுவதற்கு உதவும் ஐந்து அற்புத உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

ஆக்ரூட் :

இது நம் மூலை வளர்ச்சிக்கான ஒரு சிறந்த உணவாகும். இந்த உணவு பல தீவிர நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. சிறந்த வலி நிவாரணியாகவும் ஆற்றலை பராமரிப்பதற்கும் வளர்ச்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு அற்புதமான உணவு.

அத்திப்பழம் :

அத்திப்பழம் என்பது ஒரு அருமருந்தாகும். இயற்கையிலேயே ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் பல நன்மைகளையும் உள்ளடக்கியது இந்த பழம். இதில்  வைட்டமின் ஏ, பி1, பி2, கால்சியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இது மலச்சிக்கல் மற்றும் வயிறு சார்ந்த நோய்களை குணப்படுத்துவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

பூண்டு:

இதில் ஆண்டிபயாட்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்து உள்ளன. சிறந்த வலி நிவாரணையாக பயன்படுவது நமது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை  கட்டுப்படுத்தவும் உதவுகிறது . இதில் இருக்கக்கூடிய அமிலங்கள் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டவை . மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது .

பேரித்தம் பழம்:

இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் கொண்ட பேரித்தம் பழம் நம் உடலுக்கு தேவையான வலிமையை தருவதோடு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும்  ரத்தத்தில் சிவப்பணுக்களின் வளர்ச்சியையும் கூட்டுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏலக்காய்:

நறுமணப் பொருளாக பயன்படும் ஏலக்காய் உடலுக்கு தேவையான பல நன்மைகளையும் கொண்டிருக்கிறது. இது ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Here are five foods that can boost your immune system


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->