முடி கொட்டும் பிரச்சினைக்கு, வீட்டிலேயே இப்படி சீயக்காய் செய்து பயன்படுத்துங்கள்.!
Home made Seeyakkai
தலைமுடியில் ஷாம்பு உபயோகிப்பதால் அதிகமாக முடி கொட்டுகிறது. ஷாம்புவில் நிறைய கெமிக்கல் நிறைந்துள்ளது. இதனால், முடி கொட்டுதல், நரை முடி பிரச்சனை ,பொடுகு போன்றவை ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக இயற்கையான முறையில் வீட்டிலேயே சீயக்காய் பொடி செய்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
ஆவாரம் பூ - ஒரு கைப்பிடி
சீயக்காய் - 1 KG
செம்பருத்தி பூ - ஆறு
பச்சைப்பயிறு - 250 கிராம் செம்பருத்தி இலை - 15
வெந்தயம் - 250 கிராம்,
அரப்பு - 15 கிராம்
கருவேப்பிலை - 100 கிராம் வெட்டிவேர் -25 கிராம்
பூவந்திக்காய் - 100 கிராம்
செய்முறை :
இவை அனைத்தையும் நன்றாக நிழலில் காய வைத்துக் கொள்ளவும். 10 நாள் நிழலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக காய்ந்ததும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பவுடராகும் வரை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதை நாம் தலைக்கு குளிக்கும்போது இரண்டு ஸ்பூன் எடுத்து அதனுடன் சாதம் வடித்த கஞ்சியுடன் சேர்த்து கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், முடி கொட்டுவது நின்று விடும் மற்றும் முடி நீளமாக வளரும். முடி பளபளப்பாகவும், உறுதியாகவும் இருப்பதை உணர்ந்து கொள்வீர்கள்.