இரவில் படுத்தவுடன் தூங்க வேண்டுமா.? இதோ எளிய வழிமுறைகள்.! - Seithipunal
Seithipunal


இரவில் படுத்தவுடன் தூக்கம் வருவதற்கு என்னென்ன செய்யலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். 

தூக்கம் சரியாக வரவில்லை என்றால் சிலர் இரவில் சாப்பிடாத காரணத்தால் அவர்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். எனவே அவர்கள் முதலில் சரியான நேரத்திற்கு அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

அதேபோல் இரவு நேரத்தில் பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். எனவே படுக்கைக்கு செல்லும் முன் ஒரு டம்ளர் பால் குடிப்பது நன்றாக தூங்க உதவும்.

சிகரெட் பிடிப்பதால் இரவில் தூங்கவிடாமல் தடுக்கும். இந்தப் பழக்கம் தூக்கத்தையும் கெடுக்கிறது. எனவே சிகரெட் பிடிப்பதை தவிர்த்தால் இரவில் இனிமையாக தூங்கலாம்.

அதேபோல் நீங்கள் தூங்கும் இடம் அமைதியாகவும், நல்ல காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் தூங்கும் அறையில் செல்போன், லேப்டாப் போன்ற பொருட்கள் இருக்கக் கூடாது.

அதேபோல் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு செல்போன், டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை பார்ப்பதை நிறுத்த வேண்டும். இது உங்களுடைய தூக்கத்தை கெடுத்து தூங்கவிடாமல் செய்யும்.

குறிப்பாக தூங்க செல்வதற்கு முன்பு எதைப் பற்றியும் யோசிக்காமல் மனதை நிலையாக வைத்து படுத்தால் நன்றாக தூக்கம் வரும். தேவையற்ற எண்ணங்கள் மற்றும் கவலையில் மூழ்கி இருந்தால் நமது தூக்கத்தை கெடுக்கும். அதேபோல் தூங்கும் போது அடிக்கடி கடிகாரத்தை பார்த்தால் வரவிருக்கும் நாளை பற்றிய எண்ணங்கள் உங்கள் மனதில் தூண்டும் எனவே இது உங்களுடைய தூக்கத்தை கெடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to easily sleep in night


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->