மனக்கவலையில் உழண்டு, வாழ்வை தொலைக்காதீர்கள்.! மன நிம்மதியை பெற இதோ வழி.! - Seithipunal
Seithipunal


மனிதனுக்கு உடலின் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ? அதே அளவிற்கு மன ஆரோக்கியம் மிக முக்கியம். இந்த மன ஆரோக்கியம் தவறினால் அவரை சுற்றி இருக்கும் அனைவருமே பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். 

அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பலரும் மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் மிகுந்த அவதிப்படுகின்றனர். மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் அனைவரும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.

அப்படி மன ஆரோக்கியத்தை பெற ஒருவர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்கவே கூடாது. யாரைப் பற்றியும் யோசிக்காமல் நாம் நம்முடைய வேலையில் ஈடுபடுவது முக்கியம். 

தேவையில்லாத விஷயங்களை பற்றி யோசித்தால் நம்முடைய மனநிம்மதி கெட்டுவிடும். உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றினால் அதை பின்பற்ற எந்த தயக்கமும் காட்டாதீர்கள். இதன் காரணமாக, தேவையற்ற சிந்தனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். 

நெருக்கடியான சூழலில் தன்னம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம். அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக யோகா மற்றும் தியானம் உள்ளிட்டவற்றை கடைபிடிக்கலாம். 

நகைச்சுவை உணர்வு நம்மிடம் இருந்தால், எந்த சூழ்நிலையையும் ஈசியாக கையாண்டு விடலாம். நம் மனம் நிம்மதியுடன் இருக்கும்.

தினம்தோறும் ஒரு பழக்கத்தை பின்பற்றுவது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். சின்ன விஷயமாக இருந்தாலும் வழக்கத்திற்கு ஏற்றவாறு அதை மாற்றிச் செய்யலாம்.

தினமும் காலை மற்றும் இரவில் சில விஷயங்களை செய்வதற்கு நேரம் ஒதுக்கி விட வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி, தியானம் ஆகியவை செய்தால் நாம் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

இரவில் தூங்குவதற்கு முன் செல்போன் பார்ப்பதை தவிர்த்து விட்டு பிடித்த உணவுகளை சாப்பிட்டு, பிடித்த நபருடன் நேரத்தை செலவிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To handle Mental Health


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->