இன்று திங்கட்கிழமை.. நினைத்தாலே கடுப்பாக இருக்கிறதா!! உற்சாகமாக தொடங்குவது எப்படி?! - Seithipunal
Seithipunal


திங்கட்கிழமையை உற்சாகமாக தொடங்குவது எப்படி?

திங்கட்கிழமை என்றாலே பலருக்கும் சோம்பேறித்தனம் இருக்கும். இன்னும் இரண்டு நாள் விடுமுறை கிடைக்காதா? என்று ஏங்குவோர் பலர். அன்றுதான் தூக்கம் கண்களை விட்டு அகலாது. கட்டிலைவிட்டு எழுந்து கிளம்ப மனம் வராது. இருப்பினும் வேலைக்கு செல்ல வேண்டுமே என கடுப்பாக கிளம்புவார்கள். திங்கட்கிழமையை உற்சாகமாக தொடங்குவது எப்படி? என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

திங்கட்கிழமையை எதிர்கொள்ள எளிய வழிமுறைகள் :

திங்கட்கிழமை காலையில் சீக்கிரமாக எழுந்துவிடுங்கள். இல்லையென்றால் கடைசி நேர அவசரம் முதல் நாளையே மனஉளைச்சலை ஏற்படுத்திவிடும். வேலைக்கும் சரியான நேரத்தில் செல்ல முடியாது.

திங்கட்கிழமைகளில் உங்களுக்கு பிடித்த, உற்சாகம் கொள்ள வைக்கும் உடைகளை அணியலாம். இது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

திங்கட்கிழமையை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ரிலாக்ஸாக தயாராகுங்கள். உங்களுக்கு பிடித்த பாடலை கேட்டு கொண்டும், நடனம் ஆடி கொண்டும், வேலைக்கு தயாராகுங்கள்.

உங்களின் வேலையை பற்றியும், உங்களை பற்றியும், உங்கள் நிறுவனத்தைப் பற்றியும், உடன் பணிபுரிபவர்களை பற்றியும் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் வேலையின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். அது நமக்கு மட்டும் அல்ல, நாம் பணி செய்யும் சூழலுக்கே மிகச்சிறந்த உற்சாகத்தை கொடுக்கும்.

காலை உணவை தவிர்க்காமல் உங்களுக்கு பிடித்த உணவை சமைத்து சாப்பிடுங்கள். உங்களுக்கு பிடித்த உணவாக இருந்தால் ரசித்து, ருசித்து உண்பீர்கள்.

திங்கட்கிழமை என்றாலே சாலை நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் கோபம் மற்றும் எரிச்சலை அதிகரிக்கும். பின் அன்றைய நாள் முழுவதும் அதன் வெளிப்பாடு இருக்கும். இதை தவிர்க்க அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே தயாராகிவிடுங்கள்.

பொதுவாக, திங்கட்கிழமை பணியின் முதல் நாள் என்பதால், கடுமையான வேலைப்பளு இருக்கக்கூடும். காலையில் அவசர அவசரமாக வந்து, என்ன செய்வது? என யோசித்து கொண்டு இருக்காமல், சனிக்கிழமை வேலையை முடித்துவிட்டு செல்லும்போதே, திங்கட்கிழமை பணிகளுக்கான முன் தயாரிப்பை செய்துவிடுங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலையில் அமர்ந்து மறுநாளையும், அந்த வாரத்தையும் எப்படி சமாளிப்பது? என பணிகளைத் திட்டமிட்டு கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும், வாரமும் திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி முடிக்கப்பழகுங்கள்.

கோபமாக இருக்காமல் சிரித்த முகத்துடன் இருங்கள். அலுவலகத்தில் நுழைந்ததும், மற்றவர்களை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள். 

மேலே குறிப்பிட்ட விஷயங்களை திங்கட்கிழமை மட்டும் செய்யாமல் தினமும் செய்தால் உங்களுக்கு எல்லா நாளும் சிறப்பான நாளாகவே இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to motivate Monday works


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->