ஒற்றை தலைவலியால் அவதிபடுபவரா நீங்கள்.. இது உங்களுக்கு தான்..! - Seithipunal
Seithipunal


ஒற்றை தலைவலி வந்தாலே, "போச்சு, இன்னைக்கு நாள் விளங்கின மாதிரி தான்", என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு இந்த ஒற்றை தலைவலி ஒரு பாடுபடுத்திவிட்டு தான் போகும். சரி இது எதனால் வருகிறது? மூளையில் செரடோனின் என்ற நரம்பின் சமிக்ஞை மாறுபாடுக் கொள்வதால் ஏற்படுகிறது.

புகைப் பிடித்தல், குடிப் பழக்கம், சுற்று சூழல் மாசுப்பாடு, பெண்களுக்கு ஏற்படக்கூடிய மெனோப்பாஸ், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சமைநிலையற்ற ஹார்மோன்கள் நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருத்தல், அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சத்தம் அல்லாத ஒலி இருக்கக் கூடிய இடங்களில் தொடர்ந்து இருத்தல் முதலியன காரணங்களாக உள்ளன. 

ஒற்றை தலைவலியிலிருந்து மீள இதோ சில டிப்ஸ்:

இந்த தலைவலி இருக்கும் போது சத்தம் மற்றும் வெளிச்சமில்லாத இடங்களில் முடிந்தளவு தனிமையில் ஓய்வெடுக்க முயலுங்கள்.

சில குறிப்பிட்ட உணவுகளை தவிர்த்துக் கொள்வதன் மூலம் குறிப்பாக மோனோ சோடியம், tyramine  காம்பவுண்ட் கலக்கப்பட்ட உணவுப் பொருள்கள் அதிகமாக  இருக்கக்கூடிய cheese வகைகள் ஆகியவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலம் நம்மை ஒற்றைத் தலைவலி இருந்து  தற்காத்து  கொள்ளலாம்.

தும்பைப் பூ எண்ணெயை தலைக் குளிரத் தேய்த்து, எண்ணெய் குளியல் எடுத்தால் நல்ல தீர்வுக் கிடைக்கும். நெற்றியில் ஐஸ் பேக் ஐ கொண்டு ஒத்தடம் கொடுத்தாலும் இந்த வலியானது குறையலாம்.பால் சேர்க்காத காஃபியைக் குடிப்பதன்‌ மூலமும் இதனைக் குறைகக்லாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to take a relief from one side headache


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->