சமையல் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி! தினமும் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்! - Seithipunal
Seithipunal


நம்மில் பெரும்பாலானோர் சமையலுக்காக எரிவாயுவை பயன்படுத்துகிறோம். வீட்டில் தினசரி சாப்பாடுகளைத் தயார் செய்யும் போது, எரிவாயு எனப்படும் LPG அதிகம் பயன்படுகிறது. ஆனால், அதனை சிக்கனமாக எப்படி பயன்படுத்துவது என்பது பெரும்பாலோருக்கும் தெரியாமல் போகிறது. இன்று, எரிவாயுவை வீணாக்காமல், அதனை சிக்கனமாகப் பயன்படுத்த சில பயனுள்ள வழிகளைப் பார்ப்போம்.

சமையல் வேலைகளை ஆரம்பிக்கும்போது, எரிவாயு அடுப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கு முன்பாக, சில விஷயங்களை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

முதலாவதாக, சமையலுக்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே அடுப்பின் அருகில் வைத்திருக்க வேண்டும்.சமையலுக்கு தேவையான பொருட்கள் எங்கிருந்தாலும், ஒவ்வொன்றையும் தேடிக்கொண்டால், அதற்கான நேரத்தில் எரிவாயு விரயமாகும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேக வைப்பதற்குள் மற்ற தேவையான பொருட்கள் உங்களிடம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது, சமையல் எளிதாகவும் எரிவாயு அதிகம் வீணாகாது.

அதைத் தொடர்ந்து, மற்றொரு முக்கியமான விஷயம்  என்னவெனில், பிரஷர் குக்கரை பயன்படுத்துவது.சில சமயங்களில், ஒரே சமயத்தில் பல உணவுகளை வேகவைக்க பிரஷர் குக்கர் மிகவும் பயனுள்ளதாக அமையும். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு பருப்பு, அரிசி போன்றவற்றை ஒரே நேரத்தில் வேக வைத்தால், எரிவாயு குறைவாகப் பயன்படுத்தப்படும். பிரஷர் குக்கர், சமையல் வேலையை வேகமாகவும், குறைந்த எரிவாயுவில் முடிக்க முடியும்.
அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது தீயின் அளவை சரிசெய்வது..உங்களது சமையல் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், அதிக தீ தேவையில்லை. தீயை குறைத்து வைத்தால், உணவுப் பொருட்கள் வேகவிடப்படும், மேலும் எரிவாயு குறைவாக பயன்படுத்தப்படும். இதனைச் சரியாக செயல்வடிவமாக்கினால், வீணாகும் எரிவாயுவை எளிதில்  குறைத்துவிடலாம்.

உணவுப் பொருட்கள் வேகுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்போது, பெரிய ப்ளேமில் வைத்தால், எரிவாயு அதிகம் பயன்படுத்தப்படும். அதற்கு பதிலாக சின்ன பர்ளரைப் பயன்படுத்தினால், குறைந்த அளவில் எரிவாயு வெளியேறி , உணவுப் பொருட்கள் சீராக வேகும். இது பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் முயற்சி செய்து பாருங்கள்!

அதற்பின் அடுப்பை சரியாக பராமரித்தல் குறித்தும் முக்கியமாக இல்லத்தரசிகள் கவனிக்க வேண்டும். சில நேரங்களில், அடுப்பின் ப்ளேமில் பிரச்சினைகள் இருந்தால், நிப்பிளை குத்தி பெரியதாக மாற்றுவது எரிவாயுவை அதிகம் வீணடிக்கும். ப்ளேமின் நிறம் சிவப்பாக மாறினால், அதுவே எரிவாயு சரியாக வெளியேறவில்லை என்பதற்கான அடையாளமாகும். இதற்கு பதிலாக, அடுப்பை சரியாக பராமரிக்க வேண்டும்.

இதுவரையில்  நாம் பார்த்ததெல்லாம் அடிப்படையில், சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான சில முக்கியமான வழிமுறைகளை மீண்டும் சுருக்கமாக பார்க்கலாம். முதல்ல சமையலுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே தயாராக வைத்திருந்து சமையல் வேலைகளை தொடங்குங்கள். இரண்டாவது பிரஷர் குக்கரை பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல உணவுகளை வேகவையுங்கள். மூன்றாவது  ப்ளேமின் அளவைக் குறைத்து எரிவாயை சிக்கனமாக்குங்கள்.
நான்காவது சின்ன பர்ளரைப் பயன்படுத்தி, குறைந்த எரிவாயுவில் உணவை வேக வைத்து பழகுங்கள்! கடைசியாக அடுப்பின் பராமரிப்பை சரியாக செய்து, சரியான ப்ளேமைப் செய்து வாருங்கள்!

இதுபோன்ற எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, நீங்கள் உங்கள் சமையல் எரிவாயுவை சிக்கனமாகவும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்த முடியும். எரிவாயுவை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், பொருளாதார சிக்கனத்தை அடையலாம், மேலும் சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பிலும் நீங்கள் பங்களிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to use cooking gas economically


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->