உங்கள் நகங்களை கவனித்தீர்களா.?! நிறத்தை வைத்தே கண்டறியலாம்.!
Identify your nail
மனிதர்கள் மற்றும் மனிதர் அல்லாத விலங்குகளிலும் அவற்றின் கை மற்றும் கால்களில் விரல் நுனிகளை மறைத்து பாதுகாப்பான அரணாக அமைந்திருப்பது நகங்களாகும்.
இந்த நகங்களானது ஆல்ஃபா-கெரட்டின் என்ற கடினமான புரதத்தால் ஆனதாகும். இந்த வகையான புரதங்கள் நம் உடலில் முதுகெலும்புகள் கை, கால் நகங்கள் மற்றும் விலங்குகளின் கொம்புகளிலும். காணப்படுகின்றன. நகங்களானது நமது கைவிரல்கள் மற்றும் கால் விரல்களை பாதுகாப்பதற்கும் தொடு உணர்வுக்கும் பயன்படுகிறது.
நம் கை விரல்களில் நகங்கள் பொதுவாக பிங்க் கலரிலேயே இருக்கும். ஆனால், சிலருக்கு நகங்களானது பல்வேறு வண்ணங்களில் காணப்படும். இந்த நகங்களின் நிறங்களை வைத்து நாம் ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறோமா என்பதை அறிய உதவுகிறது.
உங்களின் நகமானது நீல நிறமாக இருந்தால் செப்பு அதிகமாகி மரபணு பிறழ்ச்சி நோயாக (வில்சன் நோய்) இருக்க வாய்ப்புண்டு. அவருக்கு ரத்தத்தில் நச்சுத்தன்மை, அல்லது நுரையீரல் பிரச்சனையாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கலாம்.
ஒருவரின் கைவிரல் நகமானது கருப்பு நிறமாக இருந்தால் அவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு, பாக்டீரியா தொற்று,சில நேரம் கல்லீரல்களில் பிரச்சனை, கேன்சர் பாதிப்பு கூட இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நகங்கள் வெள்ளை நிறமாக இருந்தால் அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், நம் உடலில் புரோட்டின் சக்தி குறைவாக இருப்பதை காட்டுவதற்காகவும் இருக்கலாம்.
ஒருவரின் கைவிரல் நகங்கள் பச்சை நிறமாக இருந்தால் அது அலர்ஜியின் அறிகுறியாக இருக்கும். மேலும் சிலருக்கு பாக்டீரியா தொற்று இருந்தாலும் விரல் நகங்கள் பச்சை நிறமாக இருக்கும்
மேலும் ஒருவரின் விரலமானது மஞ்சள் நிறமாக இருந்தால் அவருக்கு சுவாச பிரச்சனைகள் இருப்பதை அறிய உதவுகிறது. மேலும், இதே சிலருக்கு நீரிழிவு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிலர் அதிகமாக புகை பிடித்து அவர்களின் ரத்தத்தில் நிக்கோட்டின் அதிகமானால் அதன் அறிகுறியாக கூட நகங்கள் மஞ்சளாக இருக்கலாம்.
இவையனைத்தும் வாய்ப்புக்களே எனவே பயம் கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று எடுத்துச் சொல்லி ஆலோசனைப் பெறலாம்.