உறங்கும் போது குழந்தைகள் இதைச் செய்கிறார்களா?!  இனி கவலை வேண்டாம்! - Seithipunal
Seithipunal


நம் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது  சாதாரணமான ஒரு விஷயம். குழந்தைகள் ஏழு வயதை அடையும் வரை பெரும்பாலானவர்களிடம் இருக்கும் ஒரு பழக்கம். இந்த பழக்கமானது எதனால் ஏற்படுகின்றது இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

இந்த பழக்கமானது சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே இருக்கலாம் அல்லது அவர்களுக்கு என்யூரிசிஸ் என்னும் சிறுநீர் பிரச்சனையின் காரணமாக ஏற்படலாம். அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போது இரவில் உருவாகும்  சிறுநீரினை  தேக்கி வைக்கும் அளவிற்கு அவர்களது சிறுநீர்ப்பை  வளர்ச்சி அடையாமல் இருக்கலாம். சில நேரங்களில் இந்த பிரச்சனை ஹார்மோன் வளர்ச்சியின்மையின் காரணமாகவோஅல்லது சிறுநீர்ப்பாதை தொற்றின் காரணமாகவோ ஏற்படலாம்.

இவற்றை குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்க குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் திரவ உணவின் அளவினை கண்காணிக்க வேண்டும். இரவு நேரத்தில் திரவ உணவுப் பொருட்கள் மற்றும்  நீர் அதிகமாக எடுத்துக் கொள்வதை  தவிர்க்கச் செய்ய வேண்டும்

நம் குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையாவது  சிறுநீர் கழிக்கிறார்களா என்பதை  கண்காணிக்க வேண்டும். அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் இரவு உறங்கச் செல்லும் முன்  கட்டாயம் அவர்களை சிறுநீர் கழிக்க அறிவுறுத்த வேண்டும்.

மேலும் குழந்தைகள் உறங்கச் செல்லும் முன்னர் அவர்கள் நல்ல மன அமைதியான சூழலில் உறங்கச் செல்லுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் குழந்தைகள் பயத்தின் காரணமாகவும் படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவார்கள். மேலும் இந்தப் பிரச்சனையானது ஏழு வயதையும் தாண்டி இருக்கும்போது மருத்துவரை சந்தித்து இதனை தடுப்பதற்குரிய ஆலோசனை மற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is your child bed wetting dont worry and follow these steps


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->