ஐபிஎல் 2025: வாரி சுருட்டிய ஜியோ ஹாட்ஸ்டார்!
Jio HOT Star
ஐபிஎல் போட்டிகளை நேரடியாக வழங்கி வரும் ஜியோ ஹாட்ஸ்டார் தளம், தற்போது 20 கோடி கட்டண சந்தாதாரர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாத இறுதியில் 10 கோடி பயனாளர்களை கொண்டதாக ஜியோ அறிவித்தது.
அதன் பின்னர் வெறும் சில வாரங்களிலேயே இரட்டிப்பு வளர்ச்சியை கண்டுள்ளது.
இது, இந்தியாவில் டிஜிட்டல் ஊடக பயன்பாட்டின் வேகமான முன்னேற்றத்தையும், ஐபிஎல் போட்டிகளுக்கான ரசிகர் ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்த தகவலை ஆங்கில ஊடக நிறுவனமான புளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு இந்திய சந்தையில் உள்ள பெரும் தேவை, இந்த சாதனையின் பின்னணி காரணமாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், ஜியோ ஹாட்ஸ்டார் தனது வாடிக்கையாளர் அடிப்படையை விரைவாக பெருக்கி, மற்ற போட்டி தளங்களுக்கே பதிலடி கொடுத்துள்ளது.