11 மணி ஆகியும் தூக்கம் வரலையா.?! இது உங்களுக்கு தான்.!  - Seithipunal
Seithipunal


தூக்கமின்மை காரணமாக வருகின்ற பிரச்சனைகள் உடல் எடை அதிகரிப்பதற்கும் காரணமாக இருக்கும்

உணவு கட்டுப்பாட்டில் என்னதான் தீவிரமாக இருந்தாலும் நாம் சரியாக உறங்கவில்லை என்றால் நமக்கு பிரச்சனை ஏற்படும். மேலும், உடல் எடையானது அதிகரித்து விடும்.

இரவில் சரியாக உறக்கமில்லை என்றால் நம் உடலில் நீர்ச்சத்தின் அளவில் மாற்றம் ஏற்படும். இரவில் கண்விழித்திருக்கும் வேளையில் அதிகப்படியான நீரினை நம் உடலிலிருந்து எடுத்துக் கொள்வதால் டிஹைட்ரேஷன் ஏற்படுகிறது.

இரவில் உறங்காமல் இருப்பதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபடுகிறது. இரவில் நாம் உறங்காமல் இருக்கும் பொழுது அதற்கான ஆற்றலை தருவதற்காக நமது உடலானது அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் இருந்து உறிஞ்சுகிறது. இதனை சமன் செய்வதற்காக உடல் அதிகப்படியான இன்சுலினை சுரக்கிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயானது வர வாய்ப்பு இருக்கிறது.

நம் உடலும் மனமும் அதற்குரிய ஓய்வினை பெற்றால் தான்  புத்துணர்ச்சியுடன் வலிமையுடனும் இருக்கும். தூங்காமல் இருப்பதன் காரணமாக உடல் பலகீனப்படுவதோடு, நமது மனமும் சோர்வடைந்து எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டி வரும்.

தூக்கமின்மை மனதை ஒருமைப்படுத்த தடையாக இருப்பதினால் உறவுகள், உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை கையாளக் தெரியாமல் மன அழுத்தத்திற்குள் நுழைகிறார்கள்.

இரவில் உறக்கம் பாதிக்கப்படுவதால் உறங்காமல் இருக்கும் வேலைகளில் நம் உடலின் உள்ளுறுப்புகளானது அதிகப்படியான பணிச்சுமைக்கு ஆளாகின்றன. இதனால் சில நேரங்களில் அவை கெட்ட கொழுப்புகளை உற்பத்திச் செய்கின்றன. இவை, இதயநோய் வருவதற்கு காரணமாக அமைகின்றது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Late Night Sleep make More issue On Body


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->