சரியா தூங்க மாட்டீங்களா.?! உங்க இதயத்தை கொஞ்சம் கவனிங்க.!  - Seithipunal
Seithipunal


தூக்கமின்மை காரணமாக வருகின்ற பிரச்சனைகள் உடல் எடை அதிகரிப்பதற்கும் காரணமாக இருக்கும். உணவு கட்டுப்பாட்டில் என்னதான் தீவிரமாக இருந்தாலும் நாம் சரியாக உறங்கவில்லை என்றால் நமக்கு பிரச்சனை ஏற்படும். மேலும், உடல் எடையானது அதிகரித்து விடும்.

இரவில் சரியாக உறக்கமில்லை என்றால் நம் உடலில் நீர்ச்சத்தின் அளவில் மாற்றம் ஏற்படும். இரவில் கண்விழித்திருக்கும் வேளையில் அதிகப்படியான நீரினை நம் உடலிலிருந்து எடுத்துக் கொள்வதால் டிஹைட்ரேஷன் ஏற்படுகிறது.

இரவில் உறங்காமல் இருப்பதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபடுகிறது. இரவில் நாம் உறங்காமல் இருக்கும் பொழுது அதற்கான ஆற்றலை தருவதற்காக நமது உடலானது அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் இருந்து உறிஞ்சுகிறது. இதனை சமன் செய்வதற்காக உடல் அதிகப்படியான இன்சுலினை சுரக்கிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயானது வர வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஒரு முடிவில், அன்றாடம் 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு இதய நோய் தாக்குகின்ற அபாயமானது அதிகப்படியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், டயாபட்டிக் நோயாளிகளுக்கு இதற்கான ஆபத்து மூன்று மடங்கு அதிகம் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Less Than 5 hours sleep may make heart attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->