'அட.. எதுக்குப்பா அசிங்கமா தலைக்கு எண்ணெய் எல்லாம் வெச்சுக்கிட்டு..' என்கிற டைப்பா நீங்க..?! அப்போ இது உங்களுக்குத்தான்..!!
Oil Your Hair To Avoid Hair Fall
நீளமான, அடர்த்தியான தலைமுடியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். ஆனால் மாறி வரும் மோசமான உணவுப் பழக்கத்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும் தலைமுடியில் பொடுகுத் தொல்லை, வறட்சி, முடி உதிர்வு என்று பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு தலைமுடிக்கு எண்ணெய் தடவ வேண்டியது அதிமுக்கியம். இந்தப் பதிவில் தலைமுடிக்கு எப்போது எப்படி எண்ணெய் வைக்க வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்துக் காண்போம்.
உங்களுக்கு எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல் என்றால் வாரத்திற்கு 1 முறை எண்ணெய் வைத்தாலே போதும். வறண்ட கூந்தல் என்றால் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை எண்ணெய் வைக்க வேண்டும். அடுத்து நார்மல் கூந்தல் என்றால் வாரத்திற்கு 1 அல்லது 2 முறை வைத்தாலே போதும்.
தலையில் பொடுகு இருந்தாலோ, முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ வாரத்திற்கு 2 அல்லது 3 முறை கட்டாயமாக நீங்கள் எண்ணெய் வைக்க வேண்டும். மேலும் தலையில் அதிகளவு வியர்த்தாலும், வெயில் மற்றும் குளிர் காலங்களில் கண்டிப்பாக 2 அல்லது 3 முறை எண்ணெய் வைக்க வேண்டும்.
தலைக்கு எண்ணெய் வைக்கும் போது லேசாக சூடுபடுத்திய பிறகே தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் தலையில் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக உங்கள் தலைமுடியின் தன்மைக்கு ஏற்ப பொருத்தமான எண்ணெயை தேய்க்க வேண்டும். எண்ணெய் வைத்த பின்பு 1 மணி நேரமாவது ஊற விட்டு பின்பே தலையை அலச வேண்டும்.
இப்படி செய்வதால் தலைமுடி மற்றும் வேர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து நன்கு செழித்து வளரும். தலைமுடியில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். மேலும் கூந்தலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதோடு தலைமுடியில் ரத்த ஓட்டம் மேம்படும்.
English Summary
Oil Your Hair To Avoid Hair Fall