திருவிழா : புலியாட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள் என்னென்ன? - Seithipunal
Seithipunal


புலியாட்டம்:

தமிழர் கலாச்சாரத்தை எத்தனை விதமாக சொன்னாலும் நடனத்தின் மூலமாக சொல்லும்போது தமிழுக்கான அழகு மேலும் அதிகரிக்கின்றது. 

பண்டைய தமிழர்களின் கிராம கலைகளில் ஒன்றே புலியாட்டம் ஆகும். முன்பு எல்லாம் புலியாட்டம் என்பது மிக மதிக்கப்பட்ட மிகப்பெரிய வீரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது.

மேலும் இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது.

புலியாட்டம் :

புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலியாட்டம் ஆகும். இதனை புலிவேஷ ஆட்டம் என்றும் அழைப்பார்கள். இந்த புலியாட்டம் என்பது தமிழ் மக்களின் வீரத்தை எடுத்துக் காண்பிக்கும் ஒரு கலையாகும். புலி ஆட்டத்தை ஒத்து கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்களும் உண்டு.

புலியாட்டம் எவ்வாறு ஆடப்படுகிறது?

புலிவேடம் போட நாமக்கட்டியை நீரில் குழைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்வார்கள். அது உலர்ந்தபின் அதன் மேல் பிற வண்ணங்களைப் பூசுவார்கள். அதன் பிறகு உடம்பில் கருப்பு மற்றும் மஞ்சள் நிற கோடுகளையிட்டு, புலியைப் போன்று வேடமிட்டு, துணியினால் செய்யப்பட்ட வாலை தங்களது இடுப்புகளில் சொருகிக் கொண்டு தப்பிற்க்கும், மேலத்திருக்கும் ஏற்ப ஒருவரோ, இருவரோ சேர்ந்து ஆடக்கூடிய ஒரு ஆடல் நிகழ்வுதான் புலியாட்டம் ஆகும்.

மேலும் புலிமுகமுடைய முகமூடி, புலி காது, புலி வால், புலி நகங்கள் ஆகியவற்றை புலியாட்டம் ஆடும் கலைஞர்கள் அணிந்து கொள்வார்கள். மேலும் காலில் சலங்கையும் கட்டியிருப்பார்கள்.

புலியாட்டத்தில் எதிர் புலியாட்டம் முக்கியமாகும். இதில் முக்கிய ஆட்டக்காரர், புலியாட்டம் ஆடிய படியே ஆட்டுக்குட்டியை பல்லால் தூக்கி எறிவது வெற்றிக்கு அடையாளமாகும். 

நையாண்டி மேளத்துடன் ஆடப்படும் புலியாட்டம் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி மழை பெய்ய வேண்டியும் ஆடப்படுகிறது.

பின்பற்றப்படும் அசைவுகள் என்னென்ன?

புலியாட்டக்காரர் புலியின் செய்கைகள் மற்றும் இயல்புகளை தன் கைகளின் அசைவுகளாலும், முகபாவத்தாலும் வெளிப்படுத்துவார்.

இந்த ஆட்டத்தில் ஆடக்கூடியவர்கள் புலி எவ்வாறு பதுங்குமோ, எவ்வாறு பாயுமோ அதேபோன்று பதுங்கியும், பாய்ந்தும் புலியைப் போன்று நடந்து காட்டுவார்கள்.

மேலும் புலி போல உறுமிக்கொண்டு பதுங்கியும், அங்கும் இங்கும் பாய்ந்தும் ஆடும் ஆட்டம் பயத்தை உண்டாக்கினாலும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். இவ்வாறு செய்வது சிறுவர்களை அதிகம் கவரும். 

தரையோடு தரையாக பதுங்குவது, ஒளிவது, உடம்பையும், பாதங்களையும் நக்குவது போன்ற அசைவுகளை மேலத்தாளத்திற்கு ஏற்ப செய்து காட்டுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puliyattam special in tamil 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->