முதல் முறையாக சேப்பாக்கத்தில் தடம் பதித்த ஐதராபாத் அணி.!
hydrabad team win first time chennai cheppakkam stadium
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று 43வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் மோதிக்கொண்டன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி சேப்பாக்கம் மைதானத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்குன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - ஐதராபாத் அணிகள் 5 முறை மோதியுள்ளன. இதில் 5 ஆட்டத்திலும் சென்னை வெற்றி பெற்றிருந்தது.
ஆனால், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றதன் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் தனது முதல் வெற்றியை ஐதராபாத் பதிவு செய்துள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
English Summary
hydrabad team win first time chennai cheppakkam stadium