காலையில் 'காஃபி' குடித்து விட்டு உடனடியாக பல் துலக்குபவரா நீங்க..!? அப்போ இந்தப் பதிவு உங்களுக்குத் தான்..!! - Seithipunal
Seithipunal


பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்ததுமே பல் துலக்காமல் படுக்கையிலேயே காஃபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர். பின்னர் உடனடியாக பல் துலக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர் . ஆனால் இது உடல்நிலையை பாதிக்கும் தவறான பழக்கம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

காஃபியில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. இது பற்களில் கறையை ஏற்படுத்துவதோடு, பற்சிப்பியை சேதப்படுத்துகிறது. இயல்பிலேயே மென்மையாக இருக்கும் பற்சிப்பியானது, காஃபி குடித்தவுடன் பல் துலக்குவதால் சிராய்ப்பு ஏற்பட்டு, பற்சிப்பியில் அரிப்பு, கூச்சம் ஏற்பட வழிவகுக்கும். 

மேலும் பற்களை சொத்தையாக்குவதுடன், ஈறுகளில் புண் அல்லது ரத்தப் போக்கு ஏற்பட வழிவகுக்கும். மேலும் பற்களைத் தளர்வாக்கும். பீரியாண்டால்ட் நோயை ஏற்படுத்தும். 

செய்ய வேண்டியவை :

1. காஃபி குடித்தவுடன் உங்கள் வாயை தண்ணீரில் கழுவ வேண்டும். 

2. சர்க்கரை சேர்க்காத பற்பசையை உபயோகிக்க வேண்டும். 

3. நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இதனால் உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து பற்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். 

4. பிளூரைடு கலந்த மவுத் வாஷை தான் உபயோகிக்க வேண்டும். இதனால் பற்களில் பாக்டீரியாக்களின் பெருக்கம் குறைவதோடு, பற்சிப்பியும் வலுப்படும். 

5. காலையில் காஃபி குடித்து விட்டு ஒரு 30 நிமிடங்கள் கழித்தே பல் துலக்க வேண்டும். 

6.  RDA மதிப்பு 30 - 80 வரை உள்ள பற்பசையை உபயோகப் படுத்தியே எப்போதும் பல் துலக்க வேண்டும். இதனால் உங்கள் பற்சிப்பி சேதமடைவது தடுக்கப் படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Read This If You Brushing Your Teeth Instantly After Drinking Coffee


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->