சேமியாவில் தயிர்சாதமா? - அது எப்படி?
recipe of semiya curd rice
சேமியாவில் தயிர்சாதமா? - அது எப்படி?
சாதத்தில் தான் தயிர் கலந்து சாப்பிடுவோம். ஆனால், முதல் முறையாக சேமியாவை வைத்து தயிர்சாதம் செய்வது எப்படி? என்று தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
அதற்குத் தேவையான பொருட்களின் விவரம்.:
சேமியா, தயிர், கடுகு, எண்ணெய், பச்சைமிளகாய், முந்திரி, வெங்காயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு.
செய்முறை:-
முதலில் சேமியாவை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைத்து ஆற வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதையடுத்து, வேக வைத்துள்ள சேமியாவில், தயிர், பால் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து உன்ன வேண்டும்.
English Summary
recipe of semiya curd rice