சாலையில் உள்ள வெள்ளை, மஞ்சள் நிற கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


விபத்துக்களை தடுக்கவும், நாம் சாலைகளில் எப்படி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தவும் பல விதமான கோடுகள் சாலைகளில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும்.

உதாரணமாக மஞ்சள், வெள்ளை என்ற நிறங்களிலும், இடைவெளி விட்டும், இடைவெளி இல்லாமலும் கோடுகள் இருக்கும். ஆனால் அவை எதை குறிக்கிறது என்பது ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. சாலைகளில் உள்ள கோடுகள் எதனை குறிக்கின்றது என்பதை தற்போது பார்க்கலாம்..

இடைவெளி இல்லாத மஞ்சள் கோடுகள் : பெரும்பாலும் இடது- வலது சாலைப் பிரிவுகளை (லேன்) குறிக்கும். இந்த கோடுகளை கடக்க (லேன் மாற) கூடாது.

இடைவெளி உள்ள மஞ்சள் கோடுகள் : இடது- வலது சாலைப் பிரிவுகளை குறிக்கும். பெரும்பாலும் இரண்டே லேன்கள் சாலைகளில் இருக்கும். அடுத்த லேனில், வாகனம் இல்லை எனில், வாகனம் வரவில்லை எனில், நீங்கள் முன்னால் செல்லும் வாகனத்தை முந்த அடுத்த லேனிற்கு மாறி செல்லலாம். வாகனத்தை முந்திய பின், நீங்கள் பாதுகாப்பாக உங்கள் லேனிற்கு வந்து விட வேண்டும்.

இடைவெளி உள்ள வெள்ளைக்கோடுகள் : இவை பெரும்பாலும் ஒரே சாலைப் பிரிவில் (லேன்) இருக்கும். இக்கோடுகள் இருக்கும் இடத்தில் நீங்கள் ஒரு லேனில் இருந்து இன்னொரு லேனிற்கு மாறலாம்.

இடைவெளி இல்லாத வெள்ளைக்கோடுகள் : நீங்கள் இதை கடந்து முன்னால் செல்லும் வாகனத்தை முந்தக்கூடாது.

சாலைகளின் ஓரத்தில் இடைவெளி இல்லாமல் வெள்ளை நிறக்கோடுகள் இருக்கும். அவை சாலைகளின் விளிம்பு பக்கத்தில் இருக்கிறது, அதனை தாண்டி செல்ல வேண்டாம் என்பதை குறிக்கும்.

இந்த கோடுகள் வாகனம் ஓட்டும்போது சாலைகளின் தன்மையைப் பொறுத்து போடப்பட்டிருக்கும். சாலைகளின் திருப்பங்களில், நமக்கு எதிரில் வரும் வாகனங்களை பார்க்க முடியாத காரணத்தால், அங்கு இடைவெளி இல்லாத கோடுகள் போடப்பட்டிருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Road Line details


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->