இந்திய கேரம் வீராங்கனை... 260 பதக்கங்களை வென்றவர்... யார் இவர்? - Seithipunal
Seithipunal


செ.இளவழகி:

பிறப்பு : 

செ.இளவழகி இந்திய கேரம் வீராங்கனை ஆவார். இவர் உலக கேரம் போட்டிகளில் இருமுறை வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இளவழகி, 1984ஆம் ஆண்டில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.

ஆறு வயது முதலே அக்கம்-பக்கத்தில் கேரம் விளையாடத் தொடங்கிவிட்டார். சென்னையில் இருக்கும் பள்ளிகள் அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்ற இளவழகி வெற்றிபெற்றார்.

கேரம் விளையாட்டில் முன்னேறிவந்த இளவழகி, பத்து வயதிலேயே போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார்.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தன் பாதையின் முதல் அடியை வைத்தார். முதல் ஆட்டத்தில் அவர் எட்டாம் இடத்தையே பெற முடிந்தது.

இளையோர் மற்றும் முது இளையோர் பிரிவுகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக சாம்பியன்ஷிப் பட்டத்தினை இருமுறை வென்றிருக்கிறார்.

குடும்பம் :

இவரின் தந்தை எ.இருதயராஜ் ரிக்ஷா ஓட்டுநர் ஆவார். இவரின் தாய் செல்வி இல்லத்தரசி. இவருக்கு இலக்கியா, செவ்வந்தியா என்ற இரு இளைய சகோதரிகள் உள்ளனர்.

திருமணம் : 

தேசிய முன்னாள் கேரம் சாம்பியனான சக்திவேலை இளவழகி திருமணம் செய்துகொண்டார். 

சாதனைகள் : 

2006ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார்.

2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி பிரான்சில் நடைபெற்ற 5வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார்.

2008ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கேரம் போட்டியில் முன்னாள் சாம்பியன் ராஷ்மி குமாரியினை வீழ்த்தி பட்டம் வென்றார். 

2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் ரிச்மாண்டில் நடந்த உலகக்கோப்பை போட்டியிலும் இரட்டையர் பிரிவில் சக நாட்டு வீராங்கனை ராஷ்மி குமாரியுடன் இணைந்து வெற்றிவாகை சூடினார்.

2012ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் ராஷ்மி குமாரியுடன் இணைந்து பட்டம் பெற்றார்.

பதக்கங்கள் :

இதுவரை தேசிய கேரம் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக 260 பதக்கங்களை இளவழகி வென்றிருக்கிறார். இதில் 106 தங்கப்பதக்கங்கள் அடங்கும்.

சர்வதேச அளவில் 125 பதக்கங்களை வென்றிருக்கிறார். இதில் தங்கப்பதக்கங்கள் மட்டும் 111. இந்த அளவுக்கு கேரம் விளையாட்டில் சாதித்த இளவழகிக்குப் பெரிய அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Se ilavazhagi carrom board team champion


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->