குழந்தைகளுக்கு வரும் நரை முடி பிரச்சினை.. எப்படி தவிர்க்கலாம்..? டிப்ஸ் இதோ... - Seithipunal
Seithipunal



முன்பெல்லாம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மட்டும் தலை முடி நரைக்கும் பிரச்சினை இருந்தது. ஆனால் தற்போது ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறு குழந்தைகளுக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. தலைமுடி நரைப்பதற்கு காரணம் மெலனின் என்ற நிறமி குறைபாடும், ஊட்டச்சத்துக் குறைபாடும் தான்.  

எனவே குழந்தைகளுக்கு வரும் நரைமுடி பிரச்சினைக்கு தீர்வை இந்தப் பதிவில் காண்போம். வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக் குறைபாடுகளே தலைமுடி நரைப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதால், இந்த சத்துக்கள் நிறைந்த உணவை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். 

மேலும் இரும்பு, சோடியம், தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் ஆக்சிஜனேற்றத்திற்கான பழங்கள் மற்றும் காய்கறிகள், போலிக் அமிலம் நிறைந்த பட்டாணி, பீன்ஸ், முட்டை ஆகிய உணவுகளோடு கால்சியம் அதிகம் உள்ள நெல்லிக்காய், அயோடின் நிறைந்த கேரட் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை உண்ணக் கொடுப்பதால் தலைமுடி நரைப்பதை தடுக்கலாம். 

தலைமுடி நரைப்பதில் சுற்றுச் சூழல் மாசுபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே சுற்றுப்புறத்தில் தூசி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ரசாயன நிறமிகள் கலந்த நொறுக்குத் தீனிகள் அதிகம் உட்கொள்வதும் தலைமுடி நரைப்பதற்கு காரணமாகிறது. எனவே நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். அதேபோல் நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருந்தாலும் தலைமுடி சீக்கிரம் நரைத்து விடும்  எனவே குழந்தைகளை நீண்ட நேரம் வெயிலில் விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simple Tips To Prevent From Grey Hair For Kids


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->