உங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்றிங்களா.? அப்போ இந்த ஒரு பானம் போதும்.! - Seithipunal
Seithipunal


கிராம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நம்மைப் பொறுத்தவரை கிராம்பு என்றால் பல் வலிக்கு மருந்தாக பயன்படும் என்றுதான் அறிந்திருப்போம். ஆனால் உடல் எடை குறைப்பிற்கும்  கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. கிராம்பின் மகத்துவமான மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்.

கிராம்பு நீரை குடித்து வருவதால் நரம்புகளை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைப்பதற்கு கிராம்பு ஒரு சிறந்த மருந்தாகும். பல் வலியை போக்கி பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

கிராம்பு வாசனை திரவியமாக பயன்படுவதோடு செரிமானத்திற்கு முக்கிய பங்கு வைக்கிறது. இதிலிருக்கக்கூடிய அமிலங்கள் உடல் எடை குறைப்பை தூண்டுகின்றன. தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்றுகளுக்கும்  தொண்டை பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கிராம்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வர நம் உடலின் செரிமான செயல் திறன் மேம்படுவதோடு வளர்சிதை  மாற்றத்தையும் தூண்டுகிறது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பானது தடுக்கப்படுகிறது.

கிராம்பு தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் காரணமாக இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நாள்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகின்றன.

கிராம்பு மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாகும். இதிலிருக்கக்கூடிய அமிலங்கள் மற்றும் மூலப் பொருட்கள் நரம்புகளின் செயல்பாட்டை தூண்டி அவற்றை புத்துணருடன் இருக்க வைப்பதால் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது. 

கிராம்பில் இருக்கக்கூடிய யூஜனால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக மசாலா பொருட்களில்  அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்த பின் கிராம்பை பயன்படுத்தவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

so many benefits of clove water


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->