நிம்மதியை கெடுக்கும் கோவமும் நோய்தான்! கோபத்தை குறைக்க சில எளிய பயனுள்ள வழிகள்! - Seithipunal
Seithipunal


நம்மில் பெருபாலானோருக்கு பிரச்சனையே கோவம்தான் கோவத்தில் மனஉளைச்சல்,தலைவலி,கவலை போன்ற பிரச்சனைகளில் சிக்கிகொள்கிறோம். கோவத்தில் பலரும் வாழ்க்கையை இழந்து விடுகின்றனர்.நம்மளை அறியாமல் வரு கோவத்தை குறைக்க எளிய பயனுள்ள சில வழிமுறைகள்.

முதலில் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் கோவம் உணர்வுமட்டுமல்ல..அது நோயும் கூட..மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கோவத்தை வெளிப்படுத்த வேண்டும் ஆனால்,அந்த கோவம் நாயமுள்ள கோவமாக இருக்க வேண்டும். 

இதனையும் படிங்க : பயிற்சி ஆட்டத்தில் சுவரை உடைத்த விராட் கோலி!

தேவையில்லாத இடத்திலும்,தேவையில்லாத விஷயத்திலும் கோவம் வருவதை குறைப்பது நமக்கும் நம்மை சுற்றுள்ள அனைவருக்கும் நல்லது. கோவத்தை குறைக்க முதலில் செய்யவேண்டியவை உங்களுக்கு எப்போலாம் கோபம் வருகிறதோ அப்போல்லாம் ஆழமாக மூச்சு இழுத்து, மெதுவாக விடுங்கள் அது உங்க  உடல் மற்றும் மனதை சமநிலைக்கு கொண்டுவர உதவும்.கோபத்தின் உண்மையான காரணத்தை தெரிஞ்சிக்கிட்டு புரிஞ்சிக்குங்க. கோபம் ஏன் வருகிறது என்பதை சிந்திக்க வேண்டும். பலமுறை கோபம் நேரடியான பிரச்சினையை மறைக்கவும் கூடும்.

சிறு இடைவெளி எடுக்கவும். கோபம் உண்டாகும் சூழ்நிலையில் இருந்து சில நிமிடங்கள் விலகி, மனதுக்கு ஓய்வு கொடுக்கலாம்.நேர்மறை சிந்தனையை உருவாக்குதல் மாந்திரிகமாக செயல்படும். மனதை நல்ல விஷயங்களில் செலுத்துங்கள், இது உங்கள் கோபத்தை குறைக்க உதவும்.

இதனையும் படிங்க : ட்ராமா ஓவர்.. ஓவர்..! திருமாவளவனை கிழித்தெடுத்த இடும்பாவனம்!

உடல் பயிற்சி செய்து மன அமைதியை பெறலாம். நடைபயிற்சி, யோகா போன்ற உடல் உழைப்புகள் மனதிற்கு சற்று நேரம் ஓய்வை தரும்.அதேபோல், வீறுதல் அல்லது சிரிப்பு மனதை நிம்மதியாக்கும். புத்தகங்கள் வாசித்தல், இசை கேட்குதல் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மனதை மாறும். தியானம். தியானம் செய்வது மன அமைதியை பெரிதும் மேம்படுத்தி, கோபத்தை குறைக்க உதவும். 

இந்த வழிகளை தினசரி செய்துவந்தால், உங்கள் மன அமைதி நாளுக்குநாள் வளர்ந்து, கோபம் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் பிரச்சனைகளும் கட்டுப்பாட்டில் இருக்கும்! மகிழ்ச்சி உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பரவும்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Some simple and effective ways to reduce anger


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->