டீ டைம் ஸ்நாக்ஸுக்கு அட்டகாசமான முட்டை ஆனியன் பஜ்ஜி! சூப்பர் ரெஸிபி!
Tea time snack combo egg onion bajji receipe
டீ டைம் ஸ்நாக்ஸுக்கு அட்டகாசமான முட்டை ஆனியன் பஜ்ஜி! சூப்பர் ரெஸிபி!
தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 2
வெங்காயம் - 2
கேரட் - 1 சின்னது
உருளைக்கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கடலைமாவு - 4 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி 1 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து கரிந்து போகாமல் சூடாக்கி வேகவைத்து அறுத்து வைத்த முட்டைகளில் மேலாக ஊற்றி வைக்கவும்.
ஒரு மிக்ஸிங் பவுலில் மெலிதாக நீளமாக நறுக்கிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, சேர்த்து நன்றாக கலந்தப்பின் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கலந்த கலவையில் சிறுதளவு எடுத்து வடைப் போல் பரப்பி அதன் மேல் முட்டை ஒரு துண்டை வைத்து மூடிக் கொள்ளவும். மீதியிருக்கும் முட்டை துண்டுகளையும் இதேப் போல் செய்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து செய்துவைத்த முட்டை பஜ்ஜியை போட்டு பொன்னிறமாக பொறித்தெடுத்தால் சுவையான முட்டை ஆனியன் பஜ்ஜி ரெடி.!
English Summary
Tea time snack combo egg onion bajji receipe