வீட்டில் உள்ள மின் சாதனங்களை 'இப்படித்தான்' சுத்தம் செய்யணும் மக்களே....!! - Seithipunal
Seithipunal



லைட், மடிக்கணினி, கணினி, ஸ்மார்ட் போன், டேப்லெட் என்று எல்லாரது வீட்டிலும் மின்சாதனங்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றை உபயோகப் படுத்துவது போலவே பரமாரரிப்பதும் மிக முக்கியமானது. 

எனவே வீட்டில் உபயோகப்படுத்தும் இந்த மின்சாதனங்களை எப்படி சுத்தமாக பராமரிப்பது என்று இந்தப் பதிவில் பார்ப்போம். மின்சாதனங்களை சுத்தம் செய்வதற்கு முன் வீட்டின் மின்சாரத்தை முதலில் துண்டிக்க வேண்டும். அப்படி செய்வதால் மின் அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். 

மைக்ரோஃபைபர் துணிகள் அல்லது ஏதும் மென்மையான பஞ்சு இல்லாத துணிகளைக் கொண்டு மின்சாதனங்களை சுத்தப்படுத்தலாம். மேலும் ஏர்கம்ப்ரெஸ்ஸர், டிஷ்வாஷரை உபயோகப்படுத்தலாம். 

எப்படி சுத்தம் செய்வது?

கணினிகள், கீபோர்டுகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றை ஏர் கம்ப்ரெஷர்கள் கொண்டு தூசியை துடைத்து விட்டு, சோப்பில் நனைத்த துணி கொண்டு வெளிப்புறத்தை துடைக்கலாம். சுத்தம் செய்வதற்கு முன்னர் இந்த சாதனங்களை அணைத்து விடுவது சிறந்தது. 

ஸ்மார்ட்போன்களையும் இதே முறையில் அணைத்துவிட்டு சுத்தப்படுத்தலாம். இதற்கு தண்ணீர் அல்லது ஸ்க்ரீன்சேஃப்க்ளீனர்கள் கொண்டு துணியினால் துடைக்கலாம். 

முக்கிய குறிப்புக்கள் 

இந்த தண்ணீர், சோப்பு கரைசல்களை நேரடியாக சாதனங்களின் மீது தெளிக்க கூடாது. மேலும் கீறல் ஏற்படுத்தும் பொருட்களைக் கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது. மேலும் சுத்தப் படுத்தியதும் சாதனங்களை உபயோகப் படுத்துவதற்கு முன்னர், அவற்றை முழுமையாக உலர வைக்க வேண்டும். 

மேலும் இந்த மின்சாதனங்களில் தூசி படிவதைத் தடுக்க, இவற்றை அடிக்கடி சுத்தம் செய்து வர வேண்டும். உற்பத்தியாளரின் வழிகாட்டுதல்கள் படி இந்த சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளலாம். இதனால் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதோடு, அவற்றின் ஆயட்காலமும் நீடிக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips For Cleaning Electrical Appliances at Home


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->