பொடுகு தொல்லையா? - இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள்.!
tips of dandruff
முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் பொடுகு பிரச்சனை. இதனை சரியான நேரத்தில் சரி செய்யவில்லை என்றால், மிக விரைவில் முடி உதிர்வை சந்திக்க நேரிடும். இந்தப் பொடுகை போக்க கற்பூரத்தையும் பயன்படுத்தலாம். அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
* கற்பூரம், தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு இந்த மூன்று இயற்கை பொருட்களையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை தயார் செய்து முடிக்கு பயன்படுத்தலாம்.
* சூடான ஆலிவ் எண்ணெயில் கற்பூர பொடியை கலந்து உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவினால் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
* பூந்திக்கொட்டையை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் கொதிக்க வைத்து அதில், கற்பூரத்தைக் கலந்து ஹேர் பேக் தயார் செய்யவும். இந்த இயற்கையான ஹேர் பேக்கை உங்கள் தலையில் தடவி வருவதால் பொடுகு தொல்லை வராது.