முடி வளர்ச்சியைத் தூண்டும் 5 இயற்கை தாவரங்கள்.!
tips of growth hair
தற்போதைய காலத்தில் உள்ள பெண்கள் தங்களது முடிகளை பராமரிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இயற்கை முறையில் தலைமுடியை வளர்ப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
ரோஸ்மேரி
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வைட்டமின்களைக் கொண்டுள்ள ரோஸ்மேரி தாவரம் முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான, மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ரோஸ்மேரி தாவரம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது.
கற்றாழை
முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தாவரங்களில் ஒன்று கற்றாழை. இதில் pH அளவு மிகக் குறைவாக இருப்பதால், இது உச்சந்தலைக்கு சிறந்த பொருளாக உள்ளது. மேலும் கற்றாழை ஜெல்லில் தாதுக்கள், தாமிரம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது பொடுகைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
நெல்லிக்காய்
தலைமுடிக்கு நெல்லிக்காயை எண்ணெய், ஷாம்பு அல்லது பச்சையாகப் பயன்படுத்தப்படலாம். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் கொலாஜன் புரதத்தை ஊக்குவித்து முடி வளர்ச்சியின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும், இறந்த செல்களை வெளியேற்றி மயிர்க்கால்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது.
செம்பருத்தி
அமினோ அமிலங்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ள செம்பருத்தியில் பூக்கள், இலைகள் என்று அனைத்தும் முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டவும், புதிய முடி உருவாவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது. பொடுகு, பிளவு முனை பிரச்சனைக்கும், உச்சந்தலையில் உள்ள எண்ணெய்த் தன்மையை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.