உஷார்... இது செஞ்சா உங்க ஃபோன் வெடிச்சிடும்.? உங்க செல்போனை பாதுகாக்க இதோ சில டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


நமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் செல்போன்கள் சில நேரங்களில் நமக்கே ஆபத்தாகி விடுகிறது. தற்கால அறிவியல் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் செல்போன்கள் மிகவும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. நமது வங்கி பணப்பரிவர்த்தனைகளில் இருந்து அனைத்து இன்றியமையாத வேலைகளுக்கும்  செல்போன்களின் பயன்பாடு முதன்மையாக இருக்கிறது.

முன்பு சிறியதாக செல்போன்களை பயன்படுத்தும் போது அவற்றின் சார்ஜர் என்பது இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை இருக்கும். ஆனால் இன்று  பொழுதுபோக்கிலிருந்து அனைத்து விதமான வேலைகளுக்கும் செல்போனையே பயன்படுத்துவதால் அவற்றின் பேட்டரிகளின் செயல் திறன் அதிகரித்தாலும் நமது பயன்பாட்டின் காரணமாக சார்ஜ்  விரைவிலேயே தீர்ந்து விடுகிறது.

இதுபோன்ற அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக செல்போன்களின் பேட்டரிகள் வீங்குவதும் அவை பயன்பாட்டின் போதே வெடிப்பதையும் பார்த்திருக்கிறோம். இதனால் காயங்கள் முதல் உயிரிழப்பு வரை  ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்துக் கொள்ள  செல்போன்களை சார்ஜ் செய்யும் போது பேசுவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

செல்போன்களின் பேட்டரி பழுதடைந்து விட்டால் அல்லது வீங்கி இருந்தால் உடனடியாக சேவை மையங்களில் கொடுத்து அதனை சரி செய்து கொள்ள வேண்டும். அதிகப்படியான வெப்பம் உள்ள இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக பேட்டரிகளில் இருக்கும் ரசாயனங்களில் மாற்றம் ஏற்பட்டு அவை வெடித்து விடுகின்றன. எனவே செல்போன்களை பயன்படுத்தும் போது அவற்றிற்கான பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிப்பது நலம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips to prevent your cell phone from exploding


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->