சமையல் பொருட்களில், ஈ, எரும்பு மொய்க்கிறதா? கரப்பான் தொல்லையா? இதை டிரை பன்னுங்க.!  - Seithipunal
Seithipunal


நம் சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒரு விஷயம். மேலும் நாம் சமையலுக்கு வைத்திருக்கும் பொருட்களில் எரும்புகள், வண்டு, பூச்சிகள் போன்றவை அடிக்கடி  உள்ளே புகுந்து உணவுப் பொருள்களின் தரத்தை மாசுபடுத்தும். இவற்றை எவ்வாறு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

நமது கேஸ் அடுப்பின் பர்னர்கள் கருமை நிறமாகவும் அவற்றில் அழுக்கு பிடித்திருந்தால் இந்த முறையில் சுத்தம் செய்து பாருங்கள் உங்களது பர்ணர்கள் பளிச்சென்று பளபளப்பாக மாறும். இதற்கு முதலில் ஒரு சிறிய பாக்கெட் ஈனோ  மற்றும் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீரூற்றி அதில் பர்ணரை போட்டு  அடுப்பை பற்ற வைத்து நன்றாக கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு ஒரு பாக்கெட் ஈனோவை  இட்டு நன்றாக கொதிக்க விடவும். 

பின்னர், அடுப்பை அணைத்து ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை பர்ணரை ஊற விடவும் பின்னர் வர்ணரை எடுத்து ஸ்கிரப்பரால் நன்கு தேய்க்க பர்னர் பளிச்சென்று  பளபளப்பாக மாறும்.

நாம் சீனி போட்டு வைத்திருக்கும் டப்பாவுக்குள் எறும்பு போகாமல் இருக்க  அவற்றில் இரண்டு கிராம்பு இட்டு  நன்றாக குலுக்கி வைக்கவும். இப்படி செய்தால் சீன டப்பாவுக்குள் எறும்பு போகாமல்  பாதுகாக்கலாம்.

நாம் உளுந்து போட்டு வைத்திருக்கும் டப்பாவுக்குள் பூச்சிகள் மற்றும் வண்டுகள் உள்ளே புகுந்து தொந்தரவு செய்கிறதா? இனி கவலை வேண்டாம். அந்த டப்பாவில் இரண்டு காய்ந்த மிளகாயை  போட்டு நன்றாக டப்பாவை மூடி வையுங்கள். மண்டே மற்றும் பூச்சிகளின் தொல்லை இனி இருக்காது.

கோதுமை டப்பாவுக்குள் பூச்சி புகுந்து தொந்தரவு செய்கிறதா. கோதுமை டப்பாவில்  சிறிதளவு உப்பை போட்டு  மூடி வைக்கவும். இது கோதுமை டப்பாவுக்குள் வண்டிகள் மற்றும் பூச்சிகள் வராமல் தடுக்கும்.

நம் வீட்டின் சமையலறையில் கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தால் இப்படி செய்து பாருங்கள்  கரப்பான் பூச்சிகள் சமையலறையின் பக்கமே வராது. சூடான நீரில் சம அளவு வெள்ளை வினிகரை கலந்து சமையல் முடித்த பின் அடுப்பு மற்றும்  பாத்திரங்களை கழுவும் இடங்களை  இந்தக் கலவையை வைத்து சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்து வர  நம் கிச்சனில் கரப்பான் பூச்சி மற்றும் பூச்சிகளின் தொல்லை வெகுவாக குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tips to save our kitchen from insects


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->