டேபிள் ஃபேனிலிருந்து 'ஏசி' போல் காற்று வர வேண்டுமா.? இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுங்க.? - Seithipunal
Seithipunal


கோடை காலம் வந்து விட்டாலே அனல் அடிக்கும் காற்றிலிருந்து எப்படி தப்பிப்பது என்று நாம் அனைவரும் யோசித்துக் கொண்டிருப்போம். வெளியே சென்றால்தான் வெயிலின் தாக்கம் இருக்கும் என்றால் வீட்டிற்குள் இருக்கும் போதும் வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்காக நாம் டேபிள் பேனை வைத்து பயன்படுத்தினாலும் அதிலிருந்தும் உஷ்ணமான காற்றே வரும். இந்த டேபிள் ஃபேனிலிருந்து குளிர்ந்த காற்று ஜிலுஜிலுவென்று வர என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

வெப்பக்காற்று மேலிடும் போது குளிர்ச்சியான காற்று தரையை ஒட்டி இருக்கும். எனவே நமது டேபிள் பேனை டேபிளில் வைத்து பயன்படுத்தாமல் தரையில் வைத்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது தரையில் இருக்கும் குளிர்ச்சியான காற்றினை நாம் பெறலாம்.

நம் வீட்டிலிருக்கும் டேபிள் ஃபேனில் இருந்து ஏசியை போன்று ஜில்ஜில் வென்ற காற்று வரவேண்டும் என்றால் ஃபேனிற்கு முன்பாக  ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து  பேனை ஆன் செய்ய வேண்டும். இதன் மூலம் குளிர்ச்சியான காற்றை பெறலாம்.

வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் வீட்டிலிருக்கும் துணிகளை வாஷிங் மிஷினில் ட்ரை செய்யாமல் வீட்டிற்குள் கொடி கட்டி காய போட வேண்டும். இதனால் துணியில் இருக்கும் ஈரத்தின் காரணமாக நமது டேபிள் ஃபேன் குளிர்ச்சியான காற்றை தரும்.

வீட்டிலிருக்கும் ஒரு லிட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதை ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும் இரவு உறங்கச் சொல்வதற்கு முன் ஃப்ரீசரிலிருந்து அந்த பாட்டிலை எடுத்து அதன் மேல் துணியை சுற்றி டேபிள் ஃபேனுக்கு முன்பு வைத்து  பேனை ஆன் செய்ய வேண்டும்  இதன் மூலம் ஏசியைப் போன்ற குளிர்ந்த காற்றை பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

u want to get a chill air like ac from yur table fan use these tricks


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->