பாரம்பரியமான உளுந்து புட்டு இப்படி ஈஸியா செஞ்சு சாப்பிட்டு ஆரோக்கியமா இருங்க !
Ulundhu puttu recipe in Tamil
தேவையான பொருட்கள் :
உளுந்து - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
பொடித்த பனங்கற்கண்டு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3/4 கப்
பொடித்த ஏலக்காய் - 1 / 4 டீஸ்பூன்
செய்முறை :
அடுப்பில் கடாய் வைத்து உளுத்தம் பருப்பு சேர்த்து குறைந்த தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதேப்போல் அரிசியையும் வறுத்து எடுத்துக் இரண்டையும் ஒன்றாக கலந்து நன்றாக ஒரு தட்டையில் பரப்பி முழுவதுமாக ஆறவைத்துக்கொள்ளவும்.
முழுவதாக ஆறினபின் ஒரு ஈரப்பதமில்லாக மிக்ஸி ஜாரில் ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். அதன்பின் சலிப்பதை வைத்து நன்றாக தேய்த்து சலித்து எடுத்து கொள்ளவும்.
சலித்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசறி கொள்ளவும். அதன்பின் அதில் உப்பு, கால் கப் தேங்காய் துருவல், சேர்த்து புட்டு குழாயில் அல்லது இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வேகவைத்த புட்டு மாவில் பொடித்த பனங்கற்கண்டு, தேங்காய் துருவல் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து சூப்பரான உளுந்து புட்டு தயார்.
English Summary
Ulundhu puttu recipe in Tamil