பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும் எளிமையான மருந்து.!  - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாய் சுழற்சி 25 முதல் 29 நாட்களுக்குள் ஏற்பட வேண்டும். அவ்வாறு ஏற்படாமல் குறைந்த நாட்களிலேயே மாதவிடாய் ஏற்படுத்தல், அல்லது 35 நாட்களுக்கு மேல் ஆகி மாதவிடாய் ஏற்படுதல், போன்றவை ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகும்.

இதை ஆரம்பத்திலேயே கவனித்து சரி செய்வது நல்லது. இல்லை என்றால் பின் நாளில் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு, முதல் 14 நாட்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரக்கும். பின்பு 14 இல் இருந்து 28 நாட்கள் முதல், ப்ரோஸ்ட்ரோஜன் சுரக்கும்.

இதுவே மாதவிடாய் சுழற்சி ஆகும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு காரணம்,
தைராய்டு சுரப்பி, ஹார்மோன் பிராப்ளம், மன அழுத்தம், உடல் பருமன், போன்றவற்றால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு, முதல் ஐந்து நாட்கள் வரை ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு ஏற்படும். அந்த நாட்களில் அவர்களுக்கு ஓய்வு அவசியம். இந்த நாட்களில் எள் உருண்டை, எள் மிட்டாய், போன்றவற்றை எடுத்து கொள்வது அவசியம்.

இந்த எள் விதைகளில் ஈஸ்ட்ரோஜன், துத்தநாகம், அதிகம் நிறைந்துள்ளது. இது உடலுக்குச் சென்று தேவையான ஈஸ்ட்ரோஜன் சுரப்பை, அதிகரிக்கும். இதன் காரணமாக உடலில் ஹார்மோன், அதிகம் சுரந்து, மாதவிடாய் சரி செய்யும். மேலும் 6 முதல் 14 நாட்கள் வரை ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும் காலம். இது பெண்களின் கர்ப்பப்பையை தடிமனாகவும், ஆரோக்கியமாகவும், வளர உதவும்.

மேலும், 12 முதல் 16 நாட்கள் வரை பெண்களின் நுண்ணறைகளில் முழுமையான மெச்சூர்டு முட்டை  உருவாக காரணமாகின்றன. இந்த காலகட்டத்தில் உளுத்த கஞ்சி சாப்பிடுவது மிகவும் நல்லது. இது இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும் ,மற்றும் சுண்ணாம்பு சத்தை அதிகரித்து, எலும்புகளுக்கு ஊட்டச்சத்தை கொடுத்து, ஆரோக்கியமான, வளமான முட்டையை உருவாக வழி வழிபடுக்கும். 16 முதல் 28 நாட்கள் வரை முதிர்ச்சி அடைந்த முட்டைகள், பிளப்பியன் டியூப் வழியாக, கருப்பைக்குள் சென்றடையும்.

காலம் இந்த காலகட்டத்தில்  ப்ரோஜெஸ்டரான், ஹார்மோன்கள், சுரப்பை அதிகரித்து, கர்ப்பத்தை சுமக்க உடல் தயாராகும் காலமாகும். மேலும் ஹார்மோன்கள்  குறைந்தால், மாதவிடாய் சுழற்சி ஏற்படும் .இந்த நேரத்தில் வெந்தயக் கஞ்சி தினமும் குடிப்பது நல்லது. இந்த வெந்தயக் கஞ்சியில் இருக்கும் சத்துக்களால், ஈஸ்ட்ரோஜன், ஹார்மோன்கள், போன்றவற்றை அதிகரித்து, மாதவிடாய்  உதிரப்போக்கு சரியான அளவில் ஏற்படும். இந்த வழிமுறையை டீனேஜ் பெண்கள் முதல் அனைவரும் பின்பற்றி வந்தால், அவர்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்து ஆரோக்கியமாக இருக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uluthanganji For Periods issues Tamil 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->