தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு..அதிர்ச்சி ரிப்போட்!
Tamil Nadu has low birth rate Shocking report
குழந்தைகள் பிறப்பில் தமிழகம் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருப்பதாக ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகியவை கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகியவை கணித்து வெளியாகி உள்ள தகவலில் :தேசிய அளவில் மக்கள் தொகையில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது என்றும் நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது எனவும் தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் பேர் இருந்தனர் என ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகியவை கணித்து உள்ளது.
மேலும் தேசிய சராசரியை விட நாட்டிலேயே அதிக அளவாக பீகாரில் 1.98 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 1.70-ம், மேகாலயாவில் 1.5-ம், மத்திய பிரதேசத்தில் 1.49 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி உள்ளது என குறிப்பிட்டுள்ள ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிராவில் 0.71 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 0.78 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
அதேபோல தென்மாநிலங்களான கேரளாவில் 0.22-ம், ஆந்திராவில் 0.61 சதவீதமும், கர்நாடகாவில் 0.68 சதவீதமும், தெலுங்கானாவில் 0.74 சதவீதமாகவும் இருக்கிறது என்றும் ஆனால் தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை இது தேசிய சராசரியை விட இது மிக குறைந்த அளவாக இருக்கிறது என்றும் இருப்பினும் இந்த சதவீதம் இன்னும் குறைவாகவே இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் சரிவடைந்து கொண்டே செல்கிறதுஎன்றும் கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 701 குழந்தைகள் பிறந்துள்ளனர் என்றும் 2020-ம் ஆண்டு 9 லட்சத்து 39 ஆயிரத்து 783-ம், 2021-ம் ஆண்டில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 864-ம், 2022-ம் ஆண்டில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 367-ம், 2023-ம் ஆண்டு 9 லட்சத்து 2 ஆயிரத்து 306-ம் உள்ளது என ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகியவை கவலை தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவாக 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளனர் என்றும் இது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவாகும் எனவும் அதோடு, குழந்தைகள் பிறப்பில் தமிழகம் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி 2019-ம் ஆண்டுடன், 2024-ம் ஆண்டினை ஒப்பிட்டால் 1 லட்சத்து 3 ஆயிரத்து 880 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது என்றும் . இது 11 சதவீத சரிவு ஆகும் என்றும் அதேவேளையில் 2024-ம் ஆண்டினை 2023-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 60 ஆயிரத்து 485 குழந்தை பிறப்புகள் குறைந்துள்ளது எனவும் இது 6.71 சதவீத சரிவு ஆகும் என ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகியவை கவலை தெரிவித்துள்ளது.
English Summary
Tamil Nadu has low birth rate Shocking report