இரவு 10 மணிக்கு முன்பு தூங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
What are the benefits of sleeping before 10 pm
ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்குவது இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சார்ந்த நோய் அபாயத்தை குறைக்கும் என்றும், இந்த நேரத்தை கடந்தும் காலதாமதமாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரவு 10 மணி அல்லது அதற்கு முன்னர் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் :
*இரவு சீக்கிரம் படுக்கைக்கு செல்வது ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதோடு, இடையூறு இன்றி உடலை ஓய்வெடுப்பதற்கு வழி வகை செய்யும். மேலும் இரவு 8-9 மணி வரை தூங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கான வாய்ப்பையும் தினம் தினம் ஏற்படுத்திக்கொடுக்கும்.
*இரவில் சீக்கிரமாக தூங்க செல்வது உடலுக்கு போதுமான ஓய்வை கொடுப்பதோடு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்வாய்ப்படும் அபாயத்தை தடுப்பதுடன் தொடர்புடையது. தூக்கம், நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு அத்தியாவசியமானது.
*போதுமான மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செய்யும். பல்வேறு நோய்களில் இருந்து உடலையும் பாதுகாக்கும். எனவே இரவில் நன்கு தூங்குவது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.
*நன்றாக தூங்குவது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட அபாயத்தை குறைக்கும். மேலும் தூக்கமின்மைக்கும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் நன்றாக தூங்குவது அவசியமானது.
*10 மணிக்குள் தூங்காமல் இருப்பது ஹார்மோன்களின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரவில் சரியான நேரத்தில் தூங்குவதன் மூலம் ஹார்மோன்களை சீராக நிர்வகிக்கலாம்.
English Summary
What are the benefits of sleeping before 10 pm