வாட்ஸ் அப்பின் அசத்தல் அப்டேட் விரைவில்.! யாருக்குமே தெரியாமல் இனி வெளியே போகலாம்.!
whats app new update for group left notification silent
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில், அவ்வப்போது புதிய அம்சங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு அப்டேட்டும், ஒரு புதிய அம்சம் வாட்ஸப்பில் கொண்டுவரப்படுகிறது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் குழுவில் இருந்து எந்த ஒரு நோட்டிபிகேஷன் (அறிவிப்பும்) இல்லாமல் அமைதியாக வெளியேறும் ஒரு வசதியை தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளது.
நாம் சாதாரணமாக வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறினால், அது அந்த குழுவில் உள்ள அனைவருக்கும் 'நீங்கள் குழுவில் இருந்து விலகிவிட்டதாக' நோட்டிபிகேஷன் தெரிவிக்கும்.
ஆனால் தற்போது வர இருக்கக்கூடிய இந்த புதிய அப்டேட்டில், நீங்கள் எந்த ஒரு குழுவில் இருந்தும் வெளியேறினால், அது குழுவில் உள்ள மற்றவர்களுக்கு நோட்டிபிகேஷன் காட்டாது.
அதாவது "name left" அந்த நோட்டிபிகேஷன் யாருக்கும் காட்டாது. அதேசமயத்தில் குழுவின் அட்மின் மட்டும் இதனை தெரிந்து கொள்ளும்படி இந்த புதிய அப்டேட் கொண்டுவரப்படவுள்ளது.
இந்த அம்சம் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இன்னும் உருவாக்க நிலையில்தான் உள்ளது என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
whats app new update for group left notification silent