நெருப்பு ஏன் எப்போதும் மேல் நோக்கியே எரிகின்றது? வியக்கவைக்கும் தகவல்.!
why firing up always
நெருப்பு எரியத் தேவையானவை:
எரிபொருள்
உயிர்வளி (அதாவது பிராண வாயு)
எரிபொருள் பற்றி எரியத் தேவையான எரியத் தூண்டும் தீப்பொறி.
வெப்பம் என்பது திடப்பொருள், திரவப்பொருள், வாயு மற்றும் சில பொருட்களின் மூலக்கூறுகளை விரிவடைய செய்யும் பண்புடையது. அதனால் ஒரு பொருள் எரியும் பொழுது, எரிபொருளும் அதனுடன் ஒட்டியிருக்கும் பொருட்களும் எரியும். அந்நேரத்தில் அதனை சுற்றியிருக்கின்ற காற்று வெப்பமடையும்.
அதனால் காற்றில் இருக்கின்ற தனிமங்களின் மூலக்கூறுகள் விரிவடைந்து அதன் அடர்த்தியை குறைக்கிறது. அடர்த்தி குறைந்த அல்லது குறைந்த அழுத்தம் கொண்ட காற்று மூலக்கூறுகள் மேலெழுவதாலும், வெப்பம் குறைந்த காற்று மூலக்கூறுகள் புவியீர்ப்பு விசையால் கீழே அழுத்தப்படுவதாலும், அது நெருப்பின் மேல் நுனிப்பகுதியை கூராக காட்டுகிறது.
அதே நேரத்தில் எரியும் பொருளிற்கு அருகில் வெப்பம் மிகுந்த அடர்ந்த தீப்பிழம்பைக் கொண்டதனால் இந்த பிம்பம் நெருப்பு மேல் நோக்கி எரிவது போல் நமக்கு காட்டுகிறது.
உதாரணமாக, ஒரு எரியும் மெழுகுவர்த்தியை எடுத்துக் கொண்டால், இது எளிதாகப் புரியும். மெழுகுத்திரி எரியும் பொழுது திரியின் அருகில் வெப்பம் மிகுந்த அடர்ந்த நெருப்பைக் காணலாம். ஆனால் மேலே கூரான அடர்த்தி குறைந்த நெருப்பை தான் காணமுடியும்.
புவியீர்ப்பு இல்லாத இடத்தில் எரியும் நெருப்பு கோள வடிவத்தில் இருக்கும்.