'ஒவர் திங்கிங்' செய்பவரா நீங்கள்.? அப்போ இது உங்களுக்கு தான்! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் வாழும் பலருக்கும்  பலவிதமான சிந்தனைகளும் எண்ண ஓட்டங்களும் இருக்கும். ஆனால் சிலர் எந்த ஒரு விஷயத்தையும் தாங்கள் அளவுக்கு அதிகமாக சிந்தித்து அந்த விஷயத்தை ஓவர் திங்க்  செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு எந்நேரமும் ஒரு விஷயத்தைப் பற்றிய சிந்தித்துக் கொண்டிருப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லதல்ல என்று மனநல நிபுணர்களும் மனோதத்துவ நிபுணர்களும் கூறுகின்றனர். ஓவர் திங்கிங் பற்றி சென்னையைச் சார்ந்த பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்  தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அவரது கருத்துப்படி நமக்கு இருக்கும் ஒரு பிரச்சனையை அல்லது ஒரு எதிர்மறை எண்ணத்தை மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருப்பது  ஓவர் திங்கிங். சாதாரணமாக நாம் யோசிக்க கூடிய விஷயங்கள்  கிரியேட்டிவ் திங்கிங் ஆகும்.

நமது மூளை வெவ்வேறு விஷயங்களை பற்றி யோசிப்பது அல்லது சிந்திப்பது என்பது ஆரோக்கியமான ஒரு விஷயம். அது மூளைக்கு நல்லதும் கூட. மூளையை ஓரளவு தான் பயன்படுத்த வேண்டும்  என்ற பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது அது உண்மையல்ல.

நாம் விரும்புகிறோமோ அல்லது விரும்பவில்லையோ நமது மூளை ஏதேனும் ஒரு விஷயத்தை சிந்தித்துக் கொண்டே தான் இருக்கும். எந்த சிந்தனையுமில்லாமல் என்னுடைய மூளையை அமைதியாக வைத்திருக்கிறேன் என்று நாம் எண்ண இயலாது. மூளை எப்போதும் சிந்தித்துக் கொண்டே தான் இருக்கும் அந்த சிந்தனை ஆரோக்கியமானதாகவும் நேர்மனையானதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தைப் பற்றி அதிகப்படியாக யோசிக்கும் போது நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக தோன்றுகின்றன. நம்மால் எந்த விஷயத்திலும் முழு ஈடுபாடுடன்  பங்கேற்க முடியாத நிலை உருவாகிறது. யார் மீது பழி போடுகிறோம், இதுபோன்ற சிந்தனைகள் தான் ஆரோக்கியமற்றவை.

இதனைப் பற்றி எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஓவர் திங்கிங் என்பது ஒரு புலம்பல். அதை தவிர்த்துக் கொள்வது நமது மனநலத்திற்கும் உடல் நலத்திற்கும் ஆகச் சிறந்தது  என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why overthinking is harmful to health here is the reason


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->